சினிமா
‘லியோ’ படத்தில் இணைந்த ‘பிகில்’ பட பிரபலம்!

‘லியோ’ படத்தில் ‘பிகில்’ பட பிரபலமும் இணைந்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்த வரக்கூடிய திரைப்படம் ‘லியோ’. கடந்த ஒரு மாதமாக காஷ்மீர் பகுதியில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன் தினம் அந்த பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனை அடுத்து ‘லியோ’ படக்குழு தங்கள் பகுதிகளிலும் நிலநடுக்கத்தை உணர்ந்ததாகவும் இருந்தாலும், படக்குழு அனைவரும் பாதுகாப்பாக இருப்பதையும் தயாரிப்பு நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருந்தது. இதனை அடுத்து பிரபல யூடியூபரான இர்பான் இந்த படத்தில் இருக்கிறார்.
காஷ்மீர் பகுதியில் இருந்து அவர் எடுத்து அனுப்பிய வீடியோவில் நடிகர் கதிரும் ‘லியோ’ படக்குழுவினர்களுடன் இருக்கிறார். இதனால், ‘பிகில்’ படத்தை அடுத்து நடிகர் கதிரும் இந்தப் படத்தில் இணைந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘பிகில்’ படத்தில் நடிகர் விஜய்யுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் கதிர் நடித்திருந்தார். இதனால், ‘லியோ’ படத்தில் மீண்டும் அவர் விஜய்யுடன் இணைந்து நடிப்பாரா என்று கேள்விகள் எழுப்பப்பட்டது. ஆனால், இது குறித்து கதிர் தரப்பவும் படக்குழு தரப்பும் எதுவும் தெரிவிக்காத நிலையில் இப்பொழுது நடிகர் கதிர் இந்தப் படத்தில் இருப்பதும் இந்த வீடியோ மூலம் உறுதியாகி இருக்கிறது.