சினிமா
தனுஷ் படப்பிடிப்பால் சுற்றுச்சூழல் பாதிப்பு!

தனுஷ் படப்பிடிப்பால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
‘வாத்தி’ படத்திற்கு அடுத்து நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்பொழுது முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு கிராம சூழலில் மிக பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் படபடப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் மின் விளக்குகள் மற்ற பொருள்கள் காரணமாக அங்குள்ள வனவிலங்குகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது. மேலும் படப்பிடிப்பிற்காக அங்குள்ள நீர்வரத்து பகுதிகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள புலிகள் காப்பக அதிகாரிகளிடம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகார் தெரிவித்தும் தொடர்ந்து படப்பிடிப்பு அங்கு நடைபெற்று வருகிறது.
இது குறித்து படக்குழுவிடம் தெரியப்படுத்தியும் தாங்கள் உரிய அனுமதி வாங்கிய பிறகே படப்பிடிப்பு நடத்தி வருவதாகவும் தெரிவித்து இருக்கிறார்கள். இதனால், படக்குழுவிடம் இருந்து முறையான தகவல்களைப் பெற்று வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.