சினிமா
உகாதி பண்டிகையை முன்னிட்டு வெளியான சூப்பரான காந்தாரா 2 அப்டேட்!

கன்னட திரையுலகில் கடந்த ஆண்டு வெளியான காந்தாரா திரைப்படம் கர்நாடகாவில் கேஜிஎஃப் 2 வசூல் சாதனையையே முறியடித்தது.
வராஹ ரூபம் பாடல் சர்ச்சை உள்ளிட்டவை எழுந்த நிலையிலும் காந்தாரா படத்திற்கு கன்னட ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு எழுந்தது. படத்தை இயக்கி நடித்திருந்தார் ரிஷப் ஷெட்டி. நாயகியாக சப்தமி கவுடா நடித்திருந்தார். கிஷோர் மற்றும் அச்யுத் குமார் நெகட்டிவ் ஷேடில் நடித்திருந்தனர்.

#image_title
சுமார் 15 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 400 கோடி வசூல் ஈட்டி படத்தின் ஹோம்பலே நிறுவனத்துக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுத்தது.
இந்நிலையில், காந்தாரா 2 படம் உருவாகும் என்றும் அந்த படம் ப்ரீக்வெல் ஆக இருக்கும் என இயக்குநரும் ஹீரோவுமான ரிஷப் ஷெட்டி கூறியிருந்தார்.
இந்நிலையில், தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி பண்டிகையான இன்று காந்தாரா 2 படத்தின் எழுத்துப் பணிகள் ஆரம்பம் என அட்டகாசமான அறிவிப்பை படக்குழு அறிவித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

#image_title
காந்தாரா 2 படத்தில் நான் தான் ஹீரோயின் என்பது போல தி லெஜண்ட் படத்தில் நடித்த ஊர்வசி ரவுத்தேலா ரிஷப் ஷெட்டியுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு போட்ட போஸ்ட்டிற்கு இதெல்லாம் அடிப்படை ஆதாரமற்ற பொய்யான தகவல் என ஹோம்பலே நிறுவனம் கழுவி ஊற்றியது.
காந்தாரா 2 படத்தின் காஸ்டிங் குறித்து விரைவில் அப்டேட்கள் வெளியாகும் என்றும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.