சினிமா செய்திகள்
நான் இங்கே வந்ததற்கு காரணம் யாஷிகா தான்: பிக்பாஸ் நிரூப்

நான் இந்த பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததற்கு காரணமே யாஷிகாதான் என யாஷிகாவின் முன்னாள் பாய்பிரண்ட் நிரூப் இன்று பிக்பாஸ் வீட்டில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் நிரூப் என்பதும் இவர் யாஷிகாவின் முன்னாள் பாய்பிரண்ட் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் யாஷிகா கார் விபத்தில் காயம் அடைந்த போது சம்பவ இடத்திற்கு முதலில் சென்றது நிரூப் தான் என்றும் கார் விபத்தில் பலியான யாஷிகாவின் தோழியை முதன் முதலில் பார்த்தது அவர் தான் என்றும் கூறப்பட்டது. மேலும் யாஷிகாவின் வழக்கு குறித்து காவல்துறையினரிடம் முக்கிய சில விஷயங்களையும் இவர் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் யாஷிகாவின் முன்னால் பாய்பிரெண்ட் நிரூப்ம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இன்று தனது கதையை கூற வந்த நிரூப், ‘தான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன் என்றால் அதற்கு காரணம் யாஷிகா தான் என்றும் எனக்கு இந்த துறையில் உள்ள யாரையுமே தெரியாது என்றும் அவளால் தான் எனக்கு ஒரு பாதை கிடைத்தது என்றும் அவர்தான் என் முன்னேற்றத்திற்கு காரணம் என்றும் இதை நான் கூறுவதற்கு எந்த வித அசிங்கமும்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு ஆணால் பல பெண்கள் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் போது ஏன் ஒரு பெண்ணால் ஒரு ஆண் வளர்ச்சி அடையக்கூடாது என்றும் அவர் கேள்வி எழுப்பியதும் சக போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களையும் அவர் ஒரே நிமிடத்தில் கவர்ந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Day11 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/5fuNjvMLjl
— Vijay Television (@vijaytelevision) October 14, 2021


















