சினிமா செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’ டீசர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அண்ணாத்த’, இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படம் வரும் தீபாவளி அன்று பிரமாண்டமாக திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ‘அண்ணாத்த’ படத்தின் டீசரை வெளியிட்டு உள்ளது. சுமார் இரண்டு நிமிடங்கள் வெளியாகியுள்ள இந்த டீசரில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அட்டகாசமான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் அசத்தலான காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக்ஷன் காட்சிகள் ஒவ்வொன்றும் அதிரடியாக இருப்பதை பார்க்கும்போது மிகுந்த பொருட் செலவில் எடுக்கப்பட்டது போல் தெரிகிறது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வீரநடை, ஸ்டைலிஸ்ட் பேச்சு, சிம்மக்குரல் ஆகியவை இந்த டீசர் ரஜினி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முழுக்க முழுக்க ரஜினியின் காட்சிகள் மட்டுமே உள்ளது என்பதும் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என நான்கு முக்கிய நாயகிகள் இருந்தும் இந்த டீசரில் அவர்கள் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளர் டி இமான் அவர்களின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய வலுவாக இருக்கும் என்பது இந்த டீசரில் பின்னணி இசையில் இருந்து தெரியவருகிறது.