Connect with us

டிவி

இனி எல்லோரையும் ஓட விடுறேண்.. பிக்பாஸில் மீண்டும் ஜூலி!

Published

on

பிக்பாஸ் அல்டிமேட் ஜனவரி 30-ம் தேதி முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது. அதில் முதல் போட்டியாளராகச் சினேகன் திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இரண்டாம் போட்டியாளராக ஜூலி செல்ல உள்ளார். அதற்கான ப்ரோமோ செவ்வாய்க்கிழமை வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் ஒன்றில் மெரினா போராட்டத்தில் பிரபலமடைந்த ஜூலி ஒரு போட்டியாளராகப் பங்கேற்றார். ஆனால் இவர் பிக்பாஸ்போட்டியில் சொன்ன பொய்கள் எல்லாம் பார்க்கும் போது வெறுப்பை ஏற்றியது.

இந்நிலையில் பிக்பாஸ் ஓடிடி ஸ்பெஷல் விரைவில் ஹாட்ஸ்டாரில் வருகிறது. அதன் போட்டியாளர்களை அறிமுகப்படுத்துவதற்கான இரண்டாம் ப்ரோமோவில், “ஜூலி ஹேலோ என சொல்ல, ஜூலி மேடம், ஒரு குறும் படம் கதை இருக்கு, நடிக்கிறீங்களா என கேட்க, அது என்னையா குறும்படம். ஏன் உன் வாயில ஷார்ட் ஃபிளிம் எல்லாம் வராதா? என கடுப்பாக போனை கட் செய்கிறார். பிக்பாஸ் சீசன் ஒன்றில் ஜூலிக்கு தான் முதன் முதல் குறும்படம் காண்பிக்கப்பட்டது. அந்த வார்த்தை இன்று வரை வைரல் ஆகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்து அவர்ட் பங்ஷன் போக டிரைவருக்கு கால் செய்கிறார் ஜூலி. அதை அடண்ட் செய்யும் டிரைவர் வயிறு வலி மா, வர முடியலமா என கதை விடுகிறார். ஆதை கேட்டு ஜூலி ஆடி போய்விடுகிறார். இது ஜூலி வைறு வலி என பிக்பாஸ் வீட்டில் அரங்கேற்றிய ஒரு காட்சியாகும்.

அடுத்து ஹாட் ஸ்டாரில் வைஸ் மூலம் ஒரு காமெடு வீடியோ பிளே செய்ய சொன்னால் 5 செக்கண்ட் முன்னாடி என பிக்பாஸில் இவர் குறும்படத்திற்கு பிறகும் தொடர்ந்த கதை வருகிறது. உடனே டே ய் சோதிக்காதீங்கடா என சொல்லும் ஜூலிக்கு பிக்பாஸ் போன் செய்கிறார். ஜூலி பிக்பாஸ் அல்டிமேட்டுக்கு வாங்க. சோதனையை எல்லாம் சாதனையா மாற்றலாம் என்கிறார் பிக்பாஸ்.

உடனே சந்தோஷம் அடையும் ஜூலி, ஓட்டினதும் போதும் ஒழிந்ததும் போதும். இனி எல்லோரையும் ஓட விடுகிறேன். மத்துவங்களுக்கும் குறும்படம் போட வைக்கிறேன்.” என ப்ரோமோ முடிவடைகிறது.

ஆக பிக்பாஸ் அல்டிமேட் சீசன் 1-ல் சினேகனை தொடர்ந்து ஜூலி வருகிறார் என்பது உறுதியாகிவிட்டது. பிக்பாஸ் சீனன் 1-ல் இருந்து இரண்டு போட்டியாளர்கள் உறுதியாகியுள்ள நிலையில் அடுத்து வரும் போட்டியாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

பிக்பாஸில் இதுவரை நடந்த 5 சீசனில் பங்கேற்ற போட்டியாளர்கள் விட்டத்தை பிடிக்க பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை 24 மணி நேரமும் ஹாட் ஸ்டாரில் பார்க்கலாம். இதையும் கம்ல் ஹாசன் தொகுத்து வழங்குவார்.

இந்த நிகழ்ச்சியை விஜய் டிவியில் பார்க்க முடியாது. ஹாட் ஸ்டாரில் கணக்கு வைத்துள்ளவர்கள் மட்டுமே இதை பார்க்க முடியும்.

வணிகம்7 mins ago

சென்னையில் 5ஜி சேவையைத் தொடங்கியது ஏர்டெல்.. கட்டணம் எவ்வளவு தெரியுமா?

சினிமா செய்திகள்1 day ago

தமிழ்நாட்டில் குறைந்த நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த படங்களின் பட்டியல்..!

இந்தியா4 days ago

இனி போன் எடுக்கும் போது ‘ஹேலோ’ சொல்லக் கூடாது.. அரசு ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு!

வேலைவாய்ப்பு1 week ago

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 week ago

பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 week ago

தூத்துக்குடி மாவட்டக்‌ குழந்தைப்‌ பாதுகாப்பு பிரிவில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 week ago

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 week ago

அரசு தலைமை மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 week ago

டிகிரி படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 week ago

தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு!