சினிமா செய்திகள்
முழுசா 3 ஷோ கூட முடியலை, அதற்குள் ஆன்லைனில் பீஸ்ட்: படக்குழுவினர் அதிர்ச்சி!
தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் இன்று அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி வெளியானது. சென்னை மதுரை கோவை போன்ற பெருநகரங்களில் தவிர சிறிய நகரங்களில் காலை 7 மணிக்கு முதல் காட்சி தொடங்கியது .
இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி முழுதாக 3 ஷோக்கள் கூட முடிவடையாத நிலையில் அதற்குள் ஆன்லைனில் திருட்டுத்தனமாக பீஸ்ட் வெளிவந்துவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
முன்னணி சமூக வலைத்தளத்தில் பீஸ்ட் படத்தின் முழு திரைப்படத்தின் லிங்க் இருப்பதாக தகவல் வந்துள்ளதால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .
இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த படம் எப்படியும் ஓடிடியில் வெளிவந்து விடும் என்றாலும் முதல் நாளே இந்த படம் ஆன்லைனில் திருட்டுத்தனமாக வெளிவந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
ஏற்கனவே பீஸ்ட் படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால் முன்பதிவு செய்த பலரும் முன்பதிவை கேன்சல் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது .
பீஸ்ட் படத்திற்கு முதல் 5 நாட்களுக்கு படத்தின் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது நாளை மறுநாள் டிக்கெட்டுகள் பல திரையரங்குகளில் காலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.