சினிமா
வரிசையில் நின்றவர்களிடம் மன்னிப்பு கேட்ட விஜய்… வைரல் வீடியோ…

தமிழகம் முழுவதும் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்குப்பதிவு காலை 7 மணிமுதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நீண்ட வரிசையில் வாக்காளர்கள் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.அதேபோல் திரையுலக பிரபலங்களும் அரசியல் பிரபலங்களும் இன்று காலை 7 மணிக்கே முதல் நபராக வாக்களித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தளபதி விஜய் தன்னுடைய வீட்டின் அருகே உள்ள நீலாங்கரை வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார். சிவப்பு நிற காரில் கருப்பு மாஸ்க் அணிந்து வந்த அவரை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்த நிலையில் தேர்தல் அதிகாரிகள் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று வாக்களிக்க உதவினார்.
விஜய் வாக்களிக்க வந்ததால் அங்கு வரிசையில் நின்றிருந்தவர்களுக்கு இடையூறு ஏற்பட்டு தள்ளு முள்ளானது. இதை பார்த்த விஜய் அவர்களிடம் கை கூப்பி மன்னிப்பு கேட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்கள் வேகமாக பரவி வருகிறது.
தாம் வாக்களிக்க வந்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு மக்களுக்கு ஏற்பட்ட இடையூறுக்காக மன்னிப்பு கோரிய நடிகர் @actorvijay pic.twitter.com/AFVJ3kOaLb
— Mathiyazhagan Arumugam (@Mathireporter) February 19, 2022