Connect with us

சினிமா

பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டிய அமெரிக்க நடிகை மார்குயஷ் – போலீஸ் சுட்டுக் கொலை!

Published

on

மனநலம் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் பிரபல நடிகையைச் சுட்டுக் கொன்ற போலீசார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பேடினாவில் வசித்து வந்த இவர், ஹாலிவுட்டில் அதிகத் தொலைக்காட்சி தொடர்களில் எல்லாம் நடித்திருப்பவர் நடிகை மார்குயஷ்.

இவர் வாடகைக்கு இருக்கும் வீட்டின் உரிமையாளர் போலீஸுக்கு போன் செய்து நடிகை தன்னைத் துப்பாக்கி காட்டி மிரட்டுவதாகப் புகார் செய்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்குப் போலீசார் வந்து விசாரிக்கையில் மார்குயஷ் மனநல பாதிக்கப்பட்டவர் போல் காணப்பட்டுள்ளார்.

அவரை மருத்துவமனையில் சேர்க்க போலீசார் முடிவு செய்யும் நேரத்தில் மார்குயஷ் தான் வைத்திருந்த துப்பாக்கி காட்டி போலீசாரை சுட முயன்றார். இதனால் போலீசார் உடனே அவரைத் துப்பாக்கியார் சுட்டுக் கொன்றனர். பின்னர் அவரிடம் இருந்து துப்பாக்கியை போலீசார் சோதனை செய்ததில் நடிகை வைத்திருந்தது பொம்மை துப்பாக்கி என்று தெரியவந்துள்ளது.

பொம்மைத் துப்பாக்கியைக் காட்டி வீட்டு உரிமையாளரை மிரட்டியுள்ளார் நடிகை. ஆனால், அது தெரியாமல் போலீசார் அவரைச் சுட்டுக் கொன்று விட்டனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பதட்டமான சூழல் ஏற்பட்டது.

வெனெஸா, தொடர்ந்து பல்வேறு டிவி சீரியல்களில் நடித்துப் பிரபலமாகி இருந்தார். சுட்டுக் கொல்லப்பட்ட மார்குயஷ், கடந்த ஆண்டு அவர் நடிகர் ஜார்ஜ் க்ளூனி மீது பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Share, recommend, and sell other creators' digital products from your page..