இந்தியா
தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவி.. 20 நிமிடத்தில் போலீஸ் அதிகாரி எடுத்த அதிரடி முடிவு..!

மாணவி ஒருவர் பொதுத்தேர்வு எழுத தேர்வு மையத்துக்கு வந்த போது அவர் தவறான தேர்வு மையத்திற்கு வந்தது தெரிய வந்தது. தேர்வு தொடங்க இன்னும் 20 நிமிடம் மட்டுமே இருந்த நிலையில் அந்த பகுதியில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் எடுத்து அதிரடி முடிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேர்வு என்பது ஒரு மாணவர் மாணவிக்கு எவ்வளவு முக்கியமானது என்பதும் அந்த தேர்வு எழுதுவதற்காக பல மாதங்கள் அவர்கள் தயார் செய்திருப்பார்கள் என்பதும் தெரிந்தது. அந்த வகையில் பொது தேர்வு எழுத வந்த மாணவி ஒருவரை அவரது தந்தை தேர்வு மையத்தில் இருசக்கர வாகனத்தில் இறக்கிவிட்டு அவசர அவசரமாக தனது வேலைக்காக சென்று உள்ளார்.
மாணவி மிகுந்த உற்சாகத்துடன் தேர்வு மையத்துக்கு சென்று தனது ரோல் எண்ணை பார்த்த போது அவரது எண் அந்த தேர்வு மையத்தில் இல்லை. இதனை அடுத்து அவர் தவறான தேர்வு மையத்திற்கு வந்து விட்டோம் என்பதை புரிந்து கொண்டு கவலை அடைய தொடங்கினார்.

#image_title
மிகுந்த சோகத்துடன் காணப்பட்ட அவரை காவல்துறை அதிகாரி ஒரு அணுகி என்ன நடந்தது என்று கேட்டார். அப்போது அவர் தனது தந்தை தவறான தேர்வு மையத்திற்கு கொண்டு வந்து விட்டுவிட்டதாகவும், இன்னும் 20 நிமிடங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் நான் எப்படி சரியான தேர்வு மையத்துக்கு செல்வேன் என்றும் கவலையுடன் தெரிவித்தார்.
உடனடியாக காவல்துறை அதிகாரி மொபைல் போன் மூலம் சரியான தேர்வு மையத்தில் உள்ள அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நடந்ததை கூறி உடனடியாக அந்த மாணவியைத்தான் அழைத்து வருவதாக கூறினார். இதனை அடுத்து இருசக்கர வாகனத்தில் அந்த மாணவியை ஏற்றிக் கொண்டு 20 கிலோமீட்டர் தூரத்தை 15 நிமிடங்களில் கடந்து சரியான நேரத்தில் மாணவியை சரியான தேர்வு மையத்திற்கு அழைத்துச் சென்றார்.
இது குறித்த தகவல் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவான நிலையில் டுவிட்டர் பயனாளிகள் அந்த காவல்துறை அதிகாரிக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.