சினிமா
விஜயின் சர்கார் படத்தின் தமிழக விநியோக உரிமை எத்தனை கோடிக்கு வியாபாரம் ஆனது தெரியுமா?
That’s a schedule wrap for the amazing #Sarkar thank you @ARMurugadoss sir and @sunpictures for this amazing opportunity... it was my dream to work with our #Thalapathy @actorvijay sir... can’t wait for for Diwaliii... paattasssaaa readyyyyyy pannungaaa..!! ? ? woooohoooo pic.twitter.com/3WBEx6lI9F
— varu sarathkumar (@varusarath) September 2, 2018
சென்னை: விஜய்யுடன் நடிக்கும் கனவு நினைவானதாக வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். தீபாவளியை முன்னிட்டு உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. மூன்றாவது முறையாக விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி சேர்ந்துள்ளனர். மிகப்பெரிய அரசியல் படமாகச் சர்கார் தயாராகி வருகிறது.
இப்படத்தில் கீர்த்திச் சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, யோகிபாபு, பிரேம்குமார், பழ கருப்பையா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் வியாபாரம் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது. பெரும் பொருட்செலவில் படத்தைச் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மெர்சல் வெற்றியால் சர்கார் படத்துக்கு எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் விஜய்க்கு நன்றி எனக் கூறியுள்ள வரலட்சுமி, விஜய்யுடன் நடிக்க வேண்டுமென்ற நீண்ட நாள் ஆசை நிறைவேறியுள்ளதாக ட்வீட் செய்துள்ளார்.
“விஜய்யுடன் பணியாற்றுவது நீண்ட நாள் கனவாக இருந்தது. தீபாவளி வரை காத்திருக்க முடியாது… பட்டாசை ரெடி பண்ணுங்க…” என ட்வீட் செய்துள்ளார் வரலட்சுமி.
இதனால் விநியோகஸ்தர்கள் படத்தை வாங்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். இப்படம் தமிழகத்தில் மட்டும் 65 கோடிக்கு வியாபாரம் ஆகலாம் எனக் கூறப்படுகிறது.
இது ரஜினி படங்களை விட அதிகத் தொகை என்றும் கூறப்படுகிறது. அப்படி நடந்தால் ரஜினியை விட அதிகத் தொகைக்கு வாங்கப்படும் நடிகரின் படம் விஜய் படம் என்ற பெருமையைப் பெறும்.


















