தமிழ்நாடு
கல்லூரிகள் விடுமுறை குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட உயர்கல்வித்துறை!

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பை உயர்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதை அடுத்து ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என்றும் வரும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு என்றும் நேற்று அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் ஏற்கனவே 20 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜனவரி 31 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு உள்ளதால் அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் 31-ஆம் தேதி வரை கல்லூரிகளுக்கு வரவேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எச்சரிக்கையை மீறி தனியார் கல்லூரிகள் மாணவர்களை வரவழைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் 20ஆம் தேதி முதல் நடைபெற செமஸ்டர் இருந்த தேர்வுகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன என்பது தெரிந்ததே.


















