தமிழ்நாடு
இன்று முதல் 27-ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும்: அதிரடி உத்தரவு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரங்கள் இன்று மாலையுடன் முடிவடைய உள்ள நிலையில் இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் 27-ஆம் தேதி வரை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

#image_title
இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய உள்ளதால் கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து முதல்வர் ஸ்டாலினும், அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமியும் தீவிர இறுதி நாள் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று முதல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளான பிப்ரவரி 27-ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டுள்ளார்.
அதேப்போல வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மார்ச் 2-ஆம் தேதி வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி 5 கிலோமிட்டர் சுற்றளவில் உள்ள அனைத்துவிதமான டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். மேலும் 27-ஆம் தேதி அனைவரும் வாக்களிக்கும் விதமாக அன்று உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.