சினிமா
அஜித் படத்தில் இணைந்த நஸ்ரியா!

அஜித்தின் 59வது படத்தின் பூஜை அண்மையில் போடப்பட்டது. அமிதாப்பச்சன், டாப்ஸி நடித்த பாலிவுட் படமான பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வமான ரீமேக்கில் தான் அஜித் அடுத்ததாக நடிக்கிறார்.
இந்த படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய ஹெச். வினோத் இயக்குகிறார்.
இந்த படத்தில் டாப்ஸி நடித்த வேடத்தில் தமிழில் சில காலங்களுக்கு பிறகு நடிகை நஸ்ரியா ரீ- என்ட்ரி கொடுக்கவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த படத்தில் த்ரிஷா இல்லனா நயன்தாரா, சிம்புவின் டிரிபிள் ஏ படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மேலும், தந்தி டிவியில் இருந்து வெளியேறிய ரங்கராஜ் பாண்டேவும் இந்த படத்தில் அறிமுகமாகவுள்ளார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார்.