சினிமா செய்திகள்
ராஷ்மிகாவை அடுத்து இன்னொரு நடிகை: ‘தளபதி 66’ குறித்த மாஸ் தகவல்!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66ஆவது திரைப்படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா என சமீபத்தில் அறிவிப்பு வெளியானது என்பதும் இந்த படத்தில் ராஷ்மிகா சம்பந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது .
இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி தளபதி 66 திரைப்படத்தில் இன்னொரு நடிகை முக்கிய நடிக்க இருப்பதாகவும் இந்த நடிகை தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் புகழ் பெற்றவர் என்றும் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் இந்த நடிகையின் கேரக்டர் சற்றும் நெகட்டிவ்வாக என்றும் விஜய்க்கு எதிராக சவால் விடும் கேரக்டர் என்றும் கூறப்படுகிறது.
பொதுவாக விஜய் படத்தில் இரண்டு நாயகிகள் இருப்பது சர்வ சாதாரணம் என்பதால் இந்த படத்தில் இரண்டு நாயகிகள் இடம் பெறுகின்றனர் என்றும் அதில் ஒருவர் சற்று நெகட்டிவ் கேரக்டர் என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் கசிந்துள்ளது.
மேலும் இந்த படத்தில் சரத்குமார் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் தமன் இசையமைக்க உள்ளார் என்பதும் வம்சி இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
























