சினிமா செய்திகள்
கேஜிஎப் நடிகர் யாஷுக்கு முதலமைச்சர் வைத்த வேண்டுகோள்: வைரல் புகைப்படங்கள்

கேஜிஎப் திரைப்படத்தில் நடித்த பிரபல கன்னட நடிகர் யாஷ்க்கு முதலமைச்சர் வேண்டுகோள் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
கேஜிஎப் 2 படத்தின் மூலம் உலகம் முழுவதும் புகழ் பெற்றவர் நடிகர் யாஷ். இந்த படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த நிலையில் தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் கோடை விடுமுறைக்காக கோவா சென்றுள்ள நடிகர் யாஷ், அங்கு அவர் கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அவர்களை தனது மனைவியுடன் சென்று சந்தித்தார். இது குறித்த புகைப்படங்களை கோவா முதலமைச்சர் தனது டுவிட்டரில் பதிவு செய்து கேஜிஎப் சூப்பர் ஸ்டார் யாஷ் அவர்களையும் அவருடைய மனைவியையும் சந்தித்தது தனக்கு மிகப்பெரிய சந்தோஷம் என்று தெரிவித்துள்ளார் .
இந்த நிலையில் யாஷ் நடிக்கும் அடுத்த படத்தின் படப்ப்பிடிப்பை கோவாவில் நடத்த வேண்டும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் மற்றும் சலுகைகள் செய்து தருவதாகவும் யாஷிடம் முதல் அமைச்சர் வாக்குறுதி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.



















