சினிமா செய்திகள்
நடிகர் விஜய்யின் மகன் இயக்கியுள்ள குறும்படம் யூடியூபில் வெளியீடு!
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கி நடித்துள்ள
’ஜங்சன்’ என்ற குறும்படம் யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது.
விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் படத்தில் ’நான் அடிச்சா தாங்க மாட்ட’ என்ற பாடலில் தந்தையுடன் இணைந்து நடனமாடிய சஞ்சய், பள்ளிப்படிப்பை முடித்து தற்போது வெளிநாட்டில் பிலிம் மேக்கிங் கோர்ஸ் படித்து வருகிறார்.
இயக்குநராகும் ஆசையில் இயக்கம் குறித்த கல்வியை பயின்று வரும் சஞ்சய் தற்போது ஜங்ஷன் எனும் குறும்படத்தை இயக்கி அவரே நடித்துள்ளார். சீனியர் மாணவர்களால் நடத்தப்படும் ராகிங் கொடுமைகளை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்யின் மகன் படம் என்பதால், அதிக பொருட்செலவில் இது உருவாகவில்லை. சாதாரண ஹேண்டி கேமராவில் லோ பட்ஜெட்டில் மாணவர்களால் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த குறும்படத்திற்கு தல மற்றும் தளபதி ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விரைவில் அப்பா விஜய்யை வைத்து படமெடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.






