சினிமா
வெளியான ஒரே மாதத்தில் வசூலில் சாதனை செய்த ‘வாத்தி’!

தனுஷின் ‘வாத்தி’ திரைப்படம் வெளியான ஒரே மாதத்தில் சாதனை படைத்துள்ளது.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ், சம்யுக்தா மேனன் உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘வாத்தி’ திரைப்படம் கடந்த பிப்ரவரி 17ம் தேதி வெளியானது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் இந்த திரைப்படம் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், இந்தப் படத்தில் இருந்து டெலிட் செய்யப்பட்ட காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.
தற்பொழுது, படம் வெளியாகி ஒரு மாதமாகி உள்ள நிலையில் உலகம் முழுவதும் 118 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதனை படத்தின் தயாரிப்புத் தரப்பு அதிகாரப்பூர்வமாக சமூக வலைத்தளங்களில் அறிவித்துள்ளது. அது தெரிவித்திருப்பதாவது, ”வாத்தி’ திரைப்படம் தற்பொழுது 118 கோடி வசூலைத் தாண்டி உள்ளது. இதனை உருவாக்கித் தந்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி! உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி!’ என நெக்க்ழ்ச்சியாக இந்த செய்தியைத் தெரிவித்துள்ளது.
‘வாத்தி’ திரைப்படத்தை அடுத்து தனுஷ், இப்பொழுது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.