இந்தியா
இரவுச் செய்திகள் – 12.11.2026

- நவம்பர் 14-ம் தேதி #அனைத்து_மாவட்டங்களிலும்_பொது_விநியோகத்_திட்ட_மக்கள்_குறைதீர்_முகாம் நடைபெறுகிறது! முகாமில் பெறக்கூடிய சேவைகள்: குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம், ரேஷன் பொருட்கள் தொடர்பான புகார்கள், குடும்ப அட்டை தொடர்பான இதர குறைகள். காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை முகாம் நடைபெறும்.
- ஆர்.ஏ.சி. பயணச் சீட்டு முறையை ரத்து செய்ய ரயில்வே திட்டம். பாதிப் படுக்கைக்கு முழு கட்டணம் வசூலிப்பதாக சர்ச்சை.
- 2027-2028 கல்வி ஆண்டிற்காக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா Shoes, Socks, Sweater, Raincoat வழங்க தமிழக அரசு திட்டம் இதற்காக ரூ.52 கோடி மதிப்பில் 4 மெகா டெண்டர்கள், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் வெளியீடு
- தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் மொத்தம் 5.77 கோடி பேர் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2.82 கோடி பேரும் பெண் வாக்காளர்கள் 2.95 கோடி பேரும் மூன்றாம் பாலினத்தவர்கள் 7892 பேரும் உள்ளனர்.
- நவம்பர் 14ம் தேதி விடுமுறை என்பதால் அதற்கு முந்தைய நாளான நவம்பர் 13 ம் தேதியன்று தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கேக் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட வாரியாக கண்காணிப்பு அலுவலர்களையும் தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
- ஈரோட்டில் மஞ்சள் விலை கிடுகிடு உயர்வு! ஒரு குவிண்டால் ₹24,200 ஆக அதிகரிப்பு! கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ₹7,000 உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி!


