சினிமா செய்திகள்
தமிழக முதல்வரை சந்தித்த நடிகை நயன்தாரா: என்ன காரணம்?

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணம் ஜூன் 9ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் முக்கிய பிரபலங்களுக்கு திருமண அழைப்பிதழை கொடுத்து வரும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் சற்று முன்னர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தங்களது திருமணத்திற்கு வருகை தந்து ஆசீர்வதிக்கும்படி அழைப்பிதழ் அளித்துள்ளனர். இது குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த சந்திப்பின்போது உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா ஆகிய படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நயன்தாரா – விக்னேஷ் திருமணத்திற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வர அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது


















