ga('set', 'anonymizeIp', 1);
நேற்று வெளியான கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரை படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் சூர்யா நடித்த நிலையில் எனது கனவு நிறைவேறிவிட்டது என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான ‘விக்ரம்’ திரைப்படம் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 40 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இது குறித்து தனது டுவிட்டரில் சூர்யா கூறியபோது ’கமலஹாசன் அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை! உங்களுடன் நடிக்க வேண்டும் என்பது எனது வாழ்நாள் கனவு. அந்த கனவு தற்போது நிறைவேற்றி விட்டது. இதற்கு உறுதுணையாக இருந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் ‘விக்ரம்’ படத்தின் அடுத்த பாகத்தில் சூர்யா தான் வில்லன் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருவட்டார் ஊராட்சி…
தமிழகத்தில் கடந்த…
This website uses cookies.