Connect with us

சினிமா செய்திகள்

நயன்தாராவின் திருமண ஒளிபரப்பு: தவறாக புரிந்து கொண்ட ஊடகங்கள்!

Published

on

nayan

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை வரும் ஒன்பதாம் தேதி திருமணம் செய்ய இருக்கும் நிலையில் இந்த திருமணம் குறித்த வீடியோ நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த திருமணம் குறித்த வீடியோவை இயக்குவது பிரபல இயக்குனர் கௌதம் மேனன் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நயன்தாரா தனது திருமண வீடியோவை கூட வியாபாரம் செய்யும் அளவுக்கு தரம் தாழ்ந்து போய் விட்டார் என ஒரு சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

ஆனால் நயன்தாரா தரப்பில் இதுகுறித்து விசாரித்தபோது தனது திருமணத்திற்கு தனது ரசிகர்கள் அனைவரையும் அழைக்க வேண்டும் என்று ஆசைதான் என்றும், ஆனால் சந்தர்ப்பம் அதற்கு இடம் தரவில்லை என்றும், எனவே தனது திருமணத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காக தான் அதை வீடியோவாக எடுத்து நெட்ப்ளிக்ஸ் இணையதளத்தில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்து உள்ளோம் என்றும் கூறினர்.

இதற்கு பெரிய தொகை எல்லாம் அவர்களிடம் இருந்து வாங்கவில்லை அதுமட்டுமின்றி கௌதம் மேனனுக்கு இந்த திருமண வீடியோவை இயக்குவதற்கு மிகப்பெரிய சம்பளத்தை தனது கையில் இருந்துதான் நயன்தாரா கொடுத்துள்ளதாகவும் அவரது தரப்பில் இருந்து கூறப்பட்டு வருகிறது.

நேரில் அழைக்க முடியாத ரசிகர்கள் தனது திருமணத்தை வீட்டிலிருந்தே கண்டு களிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நயன்தாரா செய்துள்ள இந்த ஏற்பாட்டை, வியாபாரம் என்று சில ஊடகங்கள் தவறாக செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் நயன்தாரா தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

 

வணிகம்12 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?