Connect with us

சினிமா செய்திகள்

விஜய்-லோகேஷ் கனகராஜ் படத்தின் நாயகி ப்ரியங்கா மோகன்? பரபரப்பு தகவல்

Published

on

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான பிரியங்கா மோகன் விஜய்யின் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் விஜய் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாகவும் இதற்கான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

டாக்டர் என்ற திரைப்படத்தில் நடித்த பிரியங்கா மோகன் அதன்பிறகு எதற்கும் துணிந்தவன், டான் ஆகிய படங்களில் நடித்துள்ள நிலையில் அடுத்த படமே விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

ஏற்கனவே பிரியங்கா மோகன் ‘தலைவர் 169’ படத்திலும் நடிக்கவுள்ளதால் அவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என ரசிகர்கள் கணித்து இருந்த நிலையில் தற்போது விஜய் ஜோடியாக அவர் நடிக்க இருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Build professional one-page sites, portfolios, and bio pages with media, forms, and product selling – at a flat 5% fee with DR68 SEO power. C.