சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படத்தின் மாஸ் டிரைலர்

சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது
இந்த டிரைலரில் சிவகார்த்திகேயன் காமெடி காட்சிகள், ப்ரியங்கா மோகனுடன் ரொமான்ஸ் காட்சிகள், எஸ் ஜே சூர்யா உடன் மோதல் காட்சிகள் மற்றும் சமுத்திரகனியுடன் வில்லத்தனமான காட்சிகள் என அனைத்து அம்சங்களும் பொருந்திய ஒரு படமாக தான் உள்ளது என தெரியவருகிறது
இந்த படத்தின் ட்ரைலரில் இருந்து இந்த படம் ஒரு சூப்பர் ஹிட் என்பது இப்போதைய ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். டிரைலர் ரிலீசுக்கு பின் இந்த படத்தின் எதிர்பார்ப்பு மிக அதிக அளவில் உள்ளது.
சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், ஷிவாங்கி, சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா, பாலசரவணன், சூரி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். சிபி சக்கரவர்த்தி இயக்கி உள்ள இந்த படத்தை லைக்கா மற்றும் சிவகார்த்திகேயன் புரோடக்சன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளன