Connect with us

சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் ‘எஸ்கே 20’ படத்தின் மாஸ் அறிவிப்பு!

Published

on

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 20வது திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருவது தெரிந்ததே. பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவைப் படம் என்றும் இந்த படத்தில் டூரிஸ்ட் வழிகாட்டியாக சிவகார்த்திகேயன் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தில் வெளிநாட்டு நடிகை ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது உக்ரைன் நடிகை மரியா இந்த படத்தில் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பில் மரியா கலந்துகொண்டு சில காட்சிகளில் நடித்து உள்ளதாக கூறப்பட்டாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இப்போதுதான் வெளியாகி உள்ளது

மேலும் இந்த படத்தில் இன்னொரு நாயகியாக ராஷிக்ண்ணா நடித்து வருகிறார் என்பதும் நாயகியின் தந்தையாக சத்யராஜ் நடித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது

தமன் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வருகிறது என்பதும் சென்னை புதுவை லண்டன் மற்றும் காரைக்குடி பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
scale your rankings with free backlinks & website citations.