சினிமா செய்திகள்
2019ஆம் ஆண்டு நடந்த நடிகர் சங்க தேர்தல் செல்லுமா? நீதிபதி அதிரடி தீர்ப்பு!

நடிகர் சங்கத் தேர்தல் செல்லாது என தனி நீதிபதி உத்தரவை பிறப்பித்த நிலையில் அந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீட்டு செய்யப்பட்ட மனுவின் தீர்ப்பு சற்றுமுன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளால் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும் பாஜ்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டன.
இந்த தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் திடீரென இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என தனி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பில் நடிகர் சங்க தேர்தல் செல்லாது என தனி நீதிபதி கல்யாண சுந்தரம் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்தது. இந்த நிலையில் சற்று முன்னர் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் செல்லும் என்றும் இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை இன்னும் நான்கு வாரத்திற்குள் எண்ணி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விரைவில் வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி பெற்ற அணி எது என்பதை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


















