இந்தியா
இளைஞர்களுக்கு பெண் கிடைப்பதில்லை… திருமணம் செய்யும் பெண்களுக்கு அரசு சார்பில் 2 இலட்சம்… கர்நாடகாவை கலக்கும் தேர்தல் அறிக்கை!

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிய உள்ளது. இதனையடுத்து 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 10-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு வாக்குறுதிகளை அளித்து மக்களை கவர்ந்து வருகின்றனர்.

#image_title
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றும் என கருத்துக் கணிப்புகள் கூறினாலும் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி, மதசார்பற்ற ஜனதா தளம் என நான்கு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் மல்லுக்கட்டி வருகின்றன. ஒவ்வொரு கட்சியும் மாறி மாறி பல்வேறு வாக்குறுதிகள் அளித்து வருகின்றன. அந்த வகையில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி அளித்த தேர்தல் வாக்குறுதி ஒன்று இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
கோலார் நகரில் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டா குமாரசாமி, விவசாய தொழில் செய்யும் இளைஞர்களுக்கு பெண் கிடைப்பதில்லை என்ற புகார் இருப்பதை அறிந்தேன். இந்தப் பிரச்சனையை தீர்க்கும் விதமாக நாங்கள் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளை திருமணம் செய்யும் பெண்களுக்கு அரசு சார்பில் 2 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றார். இவரது இந்த அறிவிப்பு இளைஞர்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.