சினிமா செய்திகள்
பிரபல இசையமைப்பாளர் காலமானார்: திரையுலகினர் அதிர்ச்சி!

பழம்பெரும் இசையமைப்பாளர் உடல்நலக்குறைவால் காலமானதை அடுத்து திரையுலகினர் அதிர்ச்சி அடைந்து தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
பழம்பெரும் பாலிவுட் திரையுலக இசையமைப்பாளர் பப்பிலஹரி. இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானதாக மும்பை மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து திரையுலகினர் ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 1973ஆம் ஆண்டு முதல் ஏராளமான பாலிவுட் படங்களுக்கு இசையமைத்த பப்பிலஹரி தமிழ் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2020 ஆம் ஆண்டு வெளிவந்த ’பாஹி 3’ என்ற பாலிவுட் படத்தில் அவர் கடைசியாக இசையமைத்திருந்தார் என்பது குறிபிடத்தக்கது. அபூர்வ சகோதரிகள், பாடும் வானம்பாடி, கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா ஆகிய தமிழ் படங்களுக்கு இசையமைத்த நிலையில் தமிழ் திரையுலகினரும் அவருடைய மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.












