இந்தியா
பாத்ரூமில் ஒன்றாக குளித்து கொண்டிருந்த தம்பதி மர்ம மரணம்.. அதிர்ச்சி காரணம்..!

ஹோலி பண்டிகை கொண்டாடிட்டு வீட்டில் உள்ள பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்த தம்பதிகள் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும்.
மும்பையில் உள்ள அப்பார்ட்மெண்ட் வீடு ஒன்றில் வசிக்கும் தீபக் மற்றும் ஷில்பி ஆகிய இருவரும் நேற்று முன்தினம் ஹோலி பண்டிகை கொண்டாடினார் என்பதும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக ஹோலி பண்டிகை கொண்டாடிய பின் வீட்டிற்கு வந்து பாத்ரூமில் குளிக்க சென்றுள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் மரணம் அடைந்துள்ளனர்.காலையில் வீட்டு வேலைக்காரர் நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் அவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்தார். இதனை அடுத்து பக்கத்து வீட்டு நபர் தீபத்தின் தாயாரை தொடர்பு கொண்டு தகவல் கூறியவுடன், அவருடைய உறவினர்கள் அவசரமாக வீட்டிற்கு வந்தனர்.
தங்களிடம் உள்ள மாற்றுச் சாவியை வைத்து திறந்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் பாத்ரூமில் மயங்கிய நிலையில் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக அவர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் இருவரும் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து இறந்த தம்பதிகளின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். இது குறித்த முதல் கட்ட விசாரணையில் பாத்ரூமில் கெய்சர் வாயு கசிவு ஏற்பட்டதால் இருவரும் மயங்கி விழுந்து நீண்ட நேரம் கவனிக்கப்படாததால் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பாத்ரூமில் உள்ள தண்ணீரை சூடு செய்வதற்காக உபயோகப்படும் கெய்சர் வாயு கசிய ஆரம்பித்தால் அது ஆக்சிஜனை உட்கொண்டு விடும் என்றும் அதனால் ஆக்ஸிஜன் இல்லாத காரணத்தினால் மனிதர்கள் மயக்கம் அடையும் நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக காற்றோட்டம் இல்லாத குளியல் அறையில் முழுக்க முழுக்க ஆக்சிஜன் இல்லாமல் கார்பன் மோனாக்சைடு சுவாசிக்க நேரிடும் போது மனிதர்கள் தங்களது சுயநினைவு இழப்பார்கள் என்றும் மூளை பாதிப்பு மற்றும் வலிப்பு உள்ளிட்ட நோய்க்கு ஆளாகலாம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தம்பதியினரின் மரணத்திற்கு காரணம் தெரியவரும் என்று காவல்துறை என தெரிவித்துள்ளனர்.