இந்தியா
39 வயது பெண் சிஇஓ அதிகாரி சாலை விபத்தில் மரணம்.. வாக்கிங் சென்றபோது ஏற்பட்ட விபரீதம்..

முன்னணி நிறுவனத்தின் பெண் சிஇஓ ஒருவர் அதிகாலையில் வாக்கிங் சென்றபோது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகிறது என்றும் சாலை விபத்துக்களை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்த போதிலும் அதிவேகமாக கார் ஓட்டுதல், குடித்துவிட்டு கார் ஓட்டுதல் உள்ளிட்ட ஒரு சில காரணங்களால் விபத்துக்கள் அதிகமாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று காலை வேகமாக வந்த எஸ்யூவி கார் மோதியதில் 39 வயது பெண் ஒருவர் பலியானார் என்றும் அவர் முன்னணி நிறுவனம் ஒன்றில் சி.இ.ஓவாக பணிபுரிந்து வந்தார் என்பது தெரிய வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சாலை விபத்தில் பலியானவர் ராஜலட்சுமி என்றும் அவர் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்தார் என்றும் கூறப்படுகிறது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணி அளவில் ராஜலட்சுமி சாலையில் வாக்கிங் சென்று கொண்டிருந்தபோது வேகமாக வந்த எஸ்யூவி கார் சாலை டிவைடரில் மோதி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. அதன் பிறகு அந்த வாகனம் முழு வேகத்துடன் ராஜலட்சுமி மீது மோதியதாகவும் இதனை அடுத்து ராஜலட்சுமி தூக்கி வீசப்பட்டு பல அடி தூரத்தில் விழுந்ததாகவும் இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து உடனடியாக இருந்த பொதுமக்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணை செய்து வரும் காவல்துறையினர் எஸ்யூவி காரை ஓட்டிய டிரைவரை கைது செய்துள்ளனர். 23 வயது சுமர் என்பவர் தான் இந்த காரை ஓட்டியவர் என்றும் அவர் பொழுதுபோக்கு துறையுடன் தொடர்புடையவர் என்றும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இந்திய தண்டனை சட்டம் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் கவனக்குறைவாக காகனம் ஓட்டுதல், மரணம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.