இந்தியா
மீண்டும் ஒரு கொடூரம்.. 3 வயது சிறுமியை கடித்து குதறிய 20 நாய்கள்..!

தெரு நாய் கடியால் சிறுவர் சிறுமிகள் உயிரிழந்து வரும் சம்பவங்கள் கடந்து சில வாரங்களாக அதிகமாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். சமீபத்தில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் நாய் கூட்டத்தால் கடிக்கப்பட்டு படுகாயம் நடந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி இன்னும் ஒரு சில நகரங்களிலும் இதே போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் தற்போது உத்தர பிரதேச மாநிலத்தில் மேலும் ஒரு சிறுமி 20 நாய்களால் கடிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாண்டியா என்ற கிராமத்தில் வசிக்கும் அவதேஷ் கங்கா அவர் என்பவரின் மகள் பாரி. 3 வயதான இவர் சமீபத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென இருபது நாய்கள் கூட்டமாக வந்த அந்த சிறுமியை தாக்கி உள்ளது. சிறுமியை நாய்கள் சுமார் 100 மீட்டர் இழுத்துச் சென்றதாகவும் சரமாரியாக நாய்கள் மாறி மாறி அந்த சிறுமியை கடித்ததாகவும் தெரிகிறது. இதனை அடுத்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டின் உள்ளே இருந்து வந்த சிறுமியின் சகோதரர்கள் நாய்களை அடித்து விரட்ட முயற்சி செய்ததாகவும் ஆனால் அந்த நாய்கள் சிறுமியின் சகோதரரையும் கடித்ததாகவும் தெரிகிறது.

#image_title
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியை உடனடியாக அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் சிறுமியின் சகோதரர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நாய்கள் வளர்ப்பவர்களுக்கு ஏற்கனவே உத்தர பிரதேச மாநில அரசு கடும் விதிமுறைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்திற்கு பிறகு மேலும் சில நிபந்தனைகளை விதித்துள்ளது. இது குறித்து கால்நடை மருத்துவர் ஒருவர் கூறியபோது, ‘தெரு நாய்களுக்கு போதுமான உணவுகள் வழங்கப்படவில்லை என்றும் அதனால் அந்த நாய்கள் ஆக்ரோஷமாக இருப்பதற்கு காரணம் என்றும் தெரிவித்தார். மேலும் இன்னும் பெரும்பாலான நாய்களுக்கு கருத்தடை செய்யப்படவில்லை என்றும் இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் தெரு நாய்களை வளர்ப்பவர்கள் பதிவு செய்வது கட்டாயம் என்றும் இலவசமாக தெருநாய்களை வளர்ப்பவர்கள் கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றும் உத்தர பிரதேச அரசு அறிவித்துள்ளது.