தமிழ்நாடு
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் – தமிழ்நாட்டின் முதல் பெண் ஓதுவாருக்கு குவியும் பாராட்டுகள்!

திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு கனவான அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்னும் விஷயம் நேற்று நடைமுறைக்கு வந்தது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தமிழகத்தில் ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்னும் நோக்கில் விரைந்து நடவடிக்கை எடுத்து வந்தது.
இந்நிலையில் முறையாக பயிற்சி பெற்ற பல சாதி அர்ச்சகர்களுக்கும் நேற்று முதல்வர் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் சான்றிதழ் வழங்கப்பட்டு, பணி ஆணையும் வழங்கப்பட்டன.
#BreakingBarriers #GenderEquality #Women https://t.co/3oBUpqgack
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 15, 2021
இந்நிலையில் தமிழகத்தின் முதல் பெண் அர்ச்சகராக நேற்றுப் பணி நியமன ஆணை பெற்றார் சுஹாஞ்சனா என்னும் பெண். அவர் மாடம்பாக்கம், தேனுபுரீஸ்வரர் கோயிலுக்கு ஓதுவரானார்.
தன் பணி குறித்து, ‘நான் ஒரு நாளும் கோயிலின் ஓதுவார் ஆவேன் என்று நினைக்கவில்லை. குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கவே திருவாசகம், தேவாரம் படித்தேன். கோயிலில் அதைப் பாட வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது தற்போது நிறைவேறியுள்ளது’ என்று கூறியுள்ளார்.











