உலகம்
சீனாவில் பரவும் டெல்டா கொரோனா!

உலகை ஒன்றரை ஆண்டுகளாக ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பரவத் தொடங்கியது சீனாவில் இருந்து தான்.
அதே நேரத்தில் மற்ற நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்து போராடி வரும் சமயத்தில், சீனா அதைத் திறம்பட செய்துவிட்டது.
ஆனபோதும் தற்போது டெல்டா வகை கொரோனா தொற்றானது பல நாடுகளிலும் கட்டுப்படுத்தும் சவால்களை அதிகரித்து உள்ளன. அது சீனாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறதாம்.

சீனாவின் நான்ஜிங் மாகாணத்தில் தற்போது டெல்டா வகை கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தகவல். வியாழக் கிழமையான இன்று வரை நான்ஜிங் மாகாணத்தில் 200 பேருக்கு டெல்டா வகை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நான்ஜிங் விமான நிலையத்தில் இருந்து தான் டெல்டா கொரோனா தொற்றுப் பரவியிருக்க வேண்டும் என்று ஊகிக்கப்படுகிறது. அந்த விமான நிலையத்தில் பணிபுரிந்து வந்த துப்புரவுத் தொழிலாளர்களுக்கு முதலில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது அது படு வேகமாக பரவி வருகிறதாம். இந்த கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்து சீனா துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.





