உலகம்
குடையை பிடிக்க படாத பாடுபட்ட இங்கிலாந்து பிரதமர்…. வீடியோ பாருங்க…

சமூக வலைத்தளங்களில் தினமும் சுவாரஸ்யமான சம்பவங்கள் வீடியோவாக வெளிவருவதுண்டு. பலரும் அதை பகிரும்போது அது வைரல் வீடியோவாக மாறுவதுண்டு. சில சமயம் சங்கடமான சூழ்நிலைகளில் சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல. பெரிய மனிதர்களும் அல்லல் படுவார்கள். இதில், பிரதமர்களும் விலக்கல்ல..
சமீபத்தில் இங்கிலாந்தில் அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சம், அந்நாட்டு இளவரசர் சார்லஸ் உள்ளிட்ட பலரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது லேசாக மழை பெய்ததால் சார்லஸ் கையில் ஒரு குடை பிடித்திருந்தார். பிரதமர் போரிஸ் ஜான்சனும் அவரின் குடையை விரித்து பிடிக்க முயன்றார். ஆனால், அது காற்றில் மேல் பக்கம் தூக்கிக் கொண்டது. சிறிது நேரம் போராடி ஒருவழியாக அவர் குடையை பிடித்தார். ஒரு கட்டத்தில் அவரே சிரிப்பை அடக்க முடியாமல் குலுங்கி குலுங்கி சிரித்தார். அவர் படும்பாட்டை பார்த்து சார்லஸும் சிரித்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.