சினிமா செய்திகள்
மூன்றாம் தலைமுறை நாயகன் உருவாகிவிட்டான் உற்சாகத்தில் அருண்விஜய் குடும்பம்!

நடிகர் விஜயகுமார் குடும்பத்தில் இருந்து மூன்றாம் தலைமுறை நாயகன் உருவானதில் ஒட்டுமொத்த குடும்பம் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நடிகர் விஜயகுமாரின் பேரனும் நடிகர் அருண் விஜய் மகனும் ஆன அர்னவ் விஜய் சினிமாவில் அறிமுகம் ஆகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகும் அர்னவ் விஜய்-க்கு ஒட்டுமொத்த குடும்பத்தாரும் பாராட்டுகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.
நடிகர் சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் சார்பிலேயே மாஸ்டர் அர்னவ் விஜய் அறிமுகம் செய்யப்படுகிறார். இதுகுறித்த தனது மகிழ்ச்சியை சமுக வலைதளங்களில் வெளிப்படுத்தி உள்ளார் நடிகர் அருண் விஜய். அவர், “நடிகர் சூர்யா மூலம் அர்னவ் அறிமுகம் ஆவதில் பெருமைப்படுகிறேன். தலைமுறை தலைமுறையாகத் தொடரும் கேமிரா காதல் மீண்டும் தொடருவதில் மிகவும் மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram

















