பர்சனல் ஃபினான்ஸ்
எஸ்பிஐ, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கிகளை விட ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு அதிக லாபம் தரும் வங்கிகள்!

கொரோனா பாதிப்பால் சரிந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்த, இந்திய ரிசர்வ் வங்கி 0.75 சதவீதம் வரை ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்ததை, அடுத்து வங்கிகளும் ஃபிக்சட் டெபாசிட் திட்டம் மீதான வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளன.
எஸ்பிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஞ்சாப் நேஷ்னல் வங்கிகள் அதிகபட்சம் 6.5 சதவீத வரையில் மட்டுமே ஃபிக்சட் டெபாசிட் திட்டங்கள் மீதான லாபமாக வழங்குகின்றன.
எனவே 8 சதவீதம் முதல் 9.5 சதவீதம் வரை ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு லாபம் அளிக்கும் வங்கிகளின் பட்டியலை இங்கு பார்க்கலாம்.
ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்குக் கூட்டுறவு வங்கிகளும், ஸ்மாஸ் ஃபினான்ஸ் வங்கிகள் மட்டுமே வழங்குகின்றன, கூட்டுறவு வங்கிகளின் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்கள் பாதுகாப்பானது அல்ல என்று கூறப்படுகிறது.
ஆனால் ஸ்மால் ஃபினான்ஸ் வங்கிகளின் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்கள், வங்கி ஃபிக்க்சட் திட்டங்கள் போன்று வைப்பு நிதி காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதம் பெற்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஃபிக்சட் டெபாசிட் திட்ட வட்டி விகிதங்கள் 2 கோடி ரூபாய்க்கும் குறைவாக முதலீடு செய்பவர்களுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
| அதிக வட்டி விகித லாபம் தரும் வங்கி ஃபிக்சட் டெபாசிட் திட்டங்கள் | |||
|---|---|---|---|
| வங்கி | பொது | மூத்த குடிமக்கள் | முதலீட்டுக் காலம் |
| பாரத ஸ்டேட் வங்கி – எஸ்பிஐ | 5.70% | 6.20% | 1 வருடம் to 10 வருடங்கள் |
| பஞ்சாப் நேஷ்னல் வங்கி | 5.75% | 6.25% | 1 வருடம் to 10 வருடங்கள் |
| எச்டிஎப்சி வங்கி | 6% | 6.50% | 2 வருடங்கள் 1 நாள் – 10 வருடங்கள் |
| ஐசிஐசிஐ வங்கி | 6% | 6.50% | 2 வருடங்கள் 1 நாள் – 10 வருடங்கள் |
| உத்கர்ஷ் ஸ்மால் ஃபினான்ஸ் பாங்க் | 9% | 9.50% | 777 நாட்கள் |
| ஈக்விட்டாஸ் ஸமால் ஃபினான்ஸ் பாங்க் | 8% | 8.60% | 888 நாட்கள் |
| ஃபின்கேர் ஸ்மால் ஃபினான்ஸ் பாங்க் | 9.00% | 9.50% | 42 மாதங்கள் 1 நாள் முதல் 48 மாதங்கள் |
| ஜனா ஸ்மால் ஃபினான்ஸ் பாங்க் | 8.25% | 8.75% | 1555 நாட்கள் |
















