இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.11.2026

- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1,000 கனஅடியில் இருந்து 4,000 கனஅடியாக உயர்வு!!
- அமெரிக்கக் குழந்தைகளுக்கு 2 SpaceX பங்குகள் இலவசமாக வழங்கப்படும் என எலான் மஸ்க் அறிவிப்பு!
- SpaceX பங்குகள் அடுத்த மாதமும், மஸ்க்கின் தனிப்பட்ட பங்குகள் 2027 ஜூன் மாதமும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிப்பு.
- மதுரையைச் சுற்றியுள்ள சுங்கக் கட்டண மையங்களை முறைப்படுத்தக் கோரிய வழக்கு.பதிலளிக்கவில்லை எனில் சுங்கச்சாவடிகளை மூட உத்தரவிடப்படும் – நீதிபதிகள் எச்சரிக்கை.
- பாலஸ்தீனத்தின் இருப்பை மறுக்கும் வகையில் இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென் கவிர் கருத்து வெளியிட்டுள்ளார். பாலஸ்தீனம் என்று ஒன்று இல்லை. பாலஸ்தீனம் என்று எப்போதும் இருந்ததில்லை. இனியும் இருக்கப்போவதில்லை. பாலஸ்தீனம் என்பது உங்கள் கற்பனையில் மட்டுமே உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
- பள்ளிக்கரணை சதுப்பு நில விவகாரத்தில் தனது தரப்பு வாதத்தையும் கேட்ட பிறகே வழக்கில் உத்தரவிட வேண்டும் என பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவரும் பாமக எம்.எல்.ஏ.வுமான சௌமியா அன்புமணி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளார்!
- வெற்றிப் பயணத் திட்டம் தொடங்கியதில் இருந்தே பேருந்துகள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டு வருகின்றன. டயர், பேட்டரி, டீசல் தட்டுப்பாடு காரணமாக 1,000-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தவெக ஆட்சியில் ஓட்டுநர், நடத்துநர் பணிக்கான தேர்வு தவெக ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்தப்பட்டது; ஊதிய உயர்வு, தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்ந்து நீடிக்கின்றன. — தொமுச தலைவர் நடராஜன் விமர்சனம்!
- தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக்கான உரிமம் ஓராண்டுக்கு புதுப்பிப்பு 2026 நவம்பர் 29 முதல் 2027 நவம்பர் 28 வரை யிலான காலத்திற்கு புதுப்பிப்பு.
- தங்கம் விலை தொடர் சரிவில் இருப்பதால் நகைக்கடன் பெற்றவர்களுக்கு வங்கிகளும் நிதி நிறுவனங்களும் நோட்டீஸ். வாங்கிய கடன் தொகையை விட அடகு வைத்த நகையின் மதிப்பு குறைந்த்தால் கூடுதல் நகையை அடமானம் வைக்கவெ அல்லது கடன் தொகையில் ஒரு பகுதியை செலுத்தவோ அறிவுறுத்தப்படுவதாக தகவல்.
- பண்டிகையைக் கொண்டாட சொந்த மாநிலங்களுக்குச் சென்ற தொழிலாளர்களில் பலர் திருப்பூர் திரும்பாததால் பின்னலாடை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி சங்கத்தினர் தகவல்
