Connect with us

Uncategorized

நம்ம இந்தியாவில் மழைக்கால இரவுகளில் காடே பச்சை நிறத்தில் நட்சத்திரங்கள் போல மின்னும் அதிசயம் நடக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

Published

on

ஹாலிவுட்டின் அவதார் படத்தில் இரவு நேரத்தில் காடே நீலமும் பச்சையுமாக ஒளிர்வதைப் பார்த்து நாம் வியந்திருப்போம். “இதெல்லாம் சினிமாவில் மட்டும்தான் சாத்தியம்” என்றுதானே நினைத்தோம்? ஆனால், நிஜ உலகிலும் அதுவும் நம்ம இந்தியாவிலும் மழைக்கால இரவுகளில் காடே பச்சை நிறத்தில் நட்சத்திரங்கள் போல மின்னும் அதிசயம் நடக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? சில வருடங்களுக்கு முன் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான “மர்மதேசம்“ என்ற தொடரில் இதுபோன்ற ஒரு காட்சியை நீங்களும் பார்த்திருக்கக்கூடும்.

கும்மிருட்டான காட்டுக்குள் டார்ச் லைட் கூட இல்லாமல் நடக்கும்போது, காய்ந்த மரப்பட்டைகள், கிளைகள் மற்றும் உதிர்ந்த இலைகளில் இருந்து பளீரென நியான் பச்சை நிறத்தில் வெளிச்சம் வருவதைப் பார்த்தால், ஏதோ மாய உலகத்திற்குள் வந்துவிட்டது போல இருக்கும்!

இதற்குப் பெயர்தான் ‘ஃபாக்ஸ்ஃபயர்’ அல்லது ‘தேவதை நெருப்பு’. பழங்காலத்தில் இதைப் பார்த்த மக்கள், காட்டுக்குள் பேய்களோ தேவதைகளோ விளக்கு ஏற்றி வைத்திருப்பதாக நினைத்துப் பயந்தார்கள். ஆனால், இதற்குப் பின்னால் இருப்பது பயோலுமினெசன்ஸ் எனப்படும் இயற்கை அறிவியல்!

கடல் அலைகள் இரவில் நீல நிறத்தில் ஒளிர்வதைப் போலவே, காடுகளில் வளரும் சில அரிய வகை ஒளிரும் பூஞ்சைகள் மற்றும் காளான்கள் குறிப்பாக மைசீனா இனத்தைச் சேர்ந்த பூஞ்சைகள் இரவில் பச்சை நிறத்தில் ஒளிர்கின்றன. ஈரப்பதம் நிறைந்த மழைக்காலங்களில், மக்கும் மரக்கட்டைகள் மற்றும் மரப்பட்டைகளில் இவை வளரும்.

இவற்றின் உடலில் உள்ள லூசிபெரின் என்ற வேதிப்பொருள், காற்றில் உள்ள ஆக்ஸிஜனுடன் வினைபுரியும்போது, வெப்பமே இல்லாத குளிர்ச்சியான பச்சை நிற ஒளியை வெளிப்படுத்துகிறது.

“சரி, இந்தப் பூஞ்சைகள் எதற்காக இரவில் ஒளிர வேண்டும்?” என்று கேட்டால், அதற்குப் பின்னால் ஒரு புத்திசாலித்தனமான காரணம் இருக்கிறது! இரவில் சுற்றித் திரியும் வண்டுகள் மற்றும் பூச்சிகளைத் தன் வெளிச்சத்தால் கவர்ந்து இழுப்பதற்காகவே இவை ஒளிர்கின்றன. அந்தப் பூச்சிகள் இதன் மீது வந்து அமரும்போது, பூஞ்சையின் வித்துக்கள் பூச்சிகளின் கால்களில் ஒட்டிக்கொண்டு காடு முழுவதும் பரவி, புதிய பூஞ்சைகள் உருவாக உதவுகின்றன!

இதைப் பார்க்க வெளிநாடுகளுக்குப் போக வேண்டிய அவசியமில்லை! நம்ம இந்தியாவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகள் (கோவா, மகாராஷ்டிரா) மற்றும் மேகாலயா காடுகளில் மழைக்கால இரவுகளில் இந்த ‘ஒளிரும் காடுகள்’ அதிசயத்தை நேரில் பார்க்க முடியும். நமது தமிழ்நாட்டில் பொதிகை மலை பகுதியிலும் இந்த அதிசயத்தை நேரில் பார்க்கலாம் என்ற கூறுகிறார்கள்.

செய்திகள்56 seconds ago

தந்தைக்கும் 15 நாட்கள் மகப்பேறு விடுப்பு! தமிழக அரசின் வரவேற்கத்தக்க அறிவிப்பு!

Uncategorized32 minutes ago

நம்ம இந்தியாவில் மழைக்கால இரவுகளில் காடே பச்சை நிறத்தில் நட்சத்திரங்கள் போல மின்னும் அதிசயம் நடக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

இந்தியா40 minutes ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 27.11.2026

செய்திகள்3 மணி நேரங்கள் ago

27.11.2026 வெள்ளி கிழமை இன்றைய ராசிபலன்கள்

இந்தியா17 மணி நேரங்கள் ago

இரவு நேரச் செய்திகள் – 26.11.2026

இந்தியா18 மணி நேரங்கள் ago

ஏஐ மூலம் திருத்தப்பட்ட புகைப்படங்களை கசியவிட்டால் பயப்படாதீர்கள்.

இந்தியா18 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.11.2026

இந்தியா19 மணி நேரங்கள் ago

சோலார் போட்டுடலாமானு தோணுதா அவசரப்படாதீங்க. உங்க EB பில்லே அதற்கு பதில் சொல்லிடும்.

இந்தியா21 மணி நேரங்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 26.11.2026

செய்திகள்1 நாள் ago

அணு ஆயுத செயற்கைக்கோளை விண்ணில் ஏவ ரஷ்யா திட்டம்? – உளவு அமைப்புகள் எச்சரிக்கை!

Uncategorized7 நாட்கள் ago

நகைச்சுவை நடிகராக வாழ்க்கையைத் தொடங்கியவர் வில்லனாக மாறியது எப்படி? –எம்.என்.நம்பியார்.

ஆரோக்கியம்6 நாட்கள் ago

தானத்தில் சிறந்த கண் தானம் செய்வது எப்படி?

Uncategorized6 நாட்கள் ago

டீ கடை ஸ்டைலில் நல்ல மொறுமொறுப்பான கீரை போண்டா

இந்தியா5 நாட்கள் ago

தங்கத்தின் விலை வீழ்ச்சி! வங்கியில் நகை அடமானம் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

இந்தியா6 நாட்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 21.11.2026

ஆரோக்கியம்4 நாட்கள் ago

இந்தியாவின் பிஸ்லேரி வாட்டர் பாதுகாப்பற்றது – உணவு பாதுகாப்புத் துறை

இந்தியா6 நாட்கள் ago

இரவு நேரச் செய்திகள் – 21.11.2026

இந்தியா7 நாட்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 20.11.2026

தமிழ்நாடு6 நாட்கள் ago

21.11.2026 இன்றைய ராசிபலன்கள்

இந்தியா6 நாட்கள் ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 21.11.2026

Translate »
Circle aink.