இந்தியா
காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 27.11.2026

- உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், சுமார் ₹8 கோடி மதிப்பிலான சொத்துகளைக் கைப்பற்றும் நோக்கில், தனது கணவர், மகன் மற்றும் உறவினர் ஒருவருக்கு ஓராண்டுக்கும் மேலாக உணவில் ஈயம் கலந்து கொடுத்ததாக 42 வயதுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- புனரமைக்கப்பட்டு வரும் மதுரை ரயில் நிலைய உச்சியில் தீபம் ஏற்றப்படும்- சென்னையில் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பேச்சு
- தமிழ்நாடு முழுவதும் கடந்த ங0 ஆண்டுகளில் காணாமல் போன 3 லட்சம் பேரில் 2 லட்சத்து 88 ஆயிரத்து 575 பேர் கண்டுபிடிப்பு. 15959 பேரை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு டிஜிபி சார்பில் அறிக்கை தாக்கல்.
- இந்தியாவின் தங்க்க்கடன் சந்தை ஓராண்டில் 60.6% வளர்ந்து ரூ.23.03 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதில் தமிழ்நாடு முதலிடம். தமிழ்நாட்டிலிருந்து ரூ.6.9 லட்சம் கோடி வழங்கப்பட்டள்ளது. கடன்வாங்குவோர் எண்ணிக்கை 5.6 கோடி. பெண் கடனாளர்கள் 2.4 கோடி. 2026 ஜூலை – செப்டம்பர் காலாண்டில் மட்டும் 45.7 லட்சம் புதிய கடனாளர்கள் இணைந்துள்ளனர்.
- சவூதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான ராஸ் தனூரா மீது யேமனின் ஹூதி கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தியதாக அறிவித்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளன. இதன்படி, பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.5 வீதத்தால் அதிகரித்து 94.61 அமெரிக்க டொலராகவும், அமெரிக்காவின் WTI ரக மசகு எண்ணெய் விலை 2 வீதத்தால் அதிகரித்து 83.68 டொலராகவும் பதிவாகியுள்ளது.
- பதினெட்டாவது மக்களவையின் எட்டாவது கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி 2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று தொடங்குகிறது. அரசாங்கப் பணிகளின் அவசியங்களுக்கு உட்பட்டு, இந்த அமர்வு 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி வியாழக்கிழமை நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவைச் செயலகத்தின் அறிவிப்பு.
- அம்பாசமுத்திரம், பெருந்துறையில் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. வழக்கு முடிந்த பிறகு மீதி 3 தொகுதிகளுக்கம் இடைத்தேர்தல் நடத்த அனுமதிக்கப்படும். – ஐகோர்ட்.
- ஈரானுக்கு எதிராக அமெரிக்கா பல ஆண்டுகளாக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக 290 பில்லியன் டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என ஈரான் நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன. இந்திய மதிப்பில் இது சுமார் 26 லட்சம் கோடி ரூபாய். இந்தத் தொகையை அமெரிக்காவிடமிருந்து வசூலிப்பது ஈரானுக்குப் பெரும் சட்டச் சவாலாக இருக்கும்.
- இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.60 உயர்ந்து கிராம் ரூ.11600க்கும் சவரன் 92800க்கும் விற்பனையாகிறது.
- இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.5 உயர்ந்து கிராம் ரூ.170க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.170000க்கும் விற்பனை ஆகிறது.
