இந்தியா
ஏஐ மூலம் திருத்தப்பட்ட புகைப்படங்களை கசியவிட்டால் பயப்படாதீர்கள்.

அன்பார்நத தமிழ்நாடு பெண்களே…
யாராவது உங்கள் நிர்வாணம் அல்லது ஏஐ மூலம் திருத்தப்பட்ட புகைப்படங்களை கசியவிட்டால் பயப்படாதீர்கள். உங்களைக் காப்பாற்ற உங்கள் அறிவுதான் ஆயுதம்.
இப்போது உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ”STOPNCII.ORG” என்ற இணையதளம் உங்கள் தேவைக்காகவே உள்ளது. வெளியேறிய, போலி அல்லது தனிப்பட்ட புகைப்படங்களை நீக்க உதவும் நம்பகமான உலகளாவிய தளம் இது.
இந்த இணையதளம் உங்கள் சொந்த புகைப்படத்திலிருந்து ஒரு தனித்துவமான டிஜிட்டல் குறியீடு (ஹாஷ்) உருவாக்கி அதைஉங்கள் சாதனத்திலேயே சேமிக்கிறது. இந்த குறியீடு FACEBOOK, INSTAGRAM மற்றும் X போன்ற பிளாட்ஃபார்ம்களுடன் பகிரப்படுகிறது. இதனால் உங்கள் புகைப்படத்திற்கு ஒத்த பொருந்தும் (மேட்சிங்) உள்ளடக்கங்களை அடையாளம் கண்டு நீக்க உதவுகிறது.
இந்த பயன்பாட்டை 18 வயது அல்லது அதற்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். புகைப்படம் உங்களுடையதாக இருக்க வேண்டும். அசல் (ORIGINAL) அசல் புகைப்படம் இருக்க வேண்டும்.
ஒரு புகைப்படத்தை நீக்குவதற்கான படிகள்
STOPNCII.ORG என்ற தளத்திற்கு சென்று CREATE YOUR CASE என்பதைத் தேர்ந்தெடுத்து உங்கள் ORIGINAL PHOTO-வை தேர்வு செய்யவும். சமர்ப்பித்த பிறகு உங்கள் CASE NUMBER மற்றும் PIN-ஐ பயன்படுத்தி உங்கள் வழக்கின் STATUS-ஐ TRACK செய்யலாம்.
மேலதிக புகார்களுக்கு 1930 என்ற சைபர் கிரைம் டோல் ஃப்ரீ எண்ணுக்கு டயல் செய்யவும். அல்லது ஒன்றிய அரசின்
cybercrime.gov.in
csk.gov.in
cert-in.org.in- ஆகிய தளங்களில் நீங்களே நேரடியாக உஙகள் புகாரை பதிவு செய்தால் உரிய அலுவலர்கள் உங்களை தொடர்பு கொண்டு உங்களது பிரச்னைக்குத் தீர்வு காண உதவுவார்கள்.

