இந்தியா
இரவு நேரச் செய்திகள் – 21.11.2026

- இஸ்ரேலில் தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக, காடி ஐசன்கோட்டின் கூட்டணி பல்வேறு முக்கிய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சி கோரியுள்ளதாக இஸ்ரேலிய ஊடகமான N12 செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, நெதன்யாகு மேலும் நான்கு ஆண்டுகளுக்குப் பிரதமராகத் தொடர்வதற்கும், தீவிர வலதுசாரிக் கட்சிகளை ஒற்றுமை அரசாங்கத்தில் இணைப்பதற்கும் ஐசன்கோட்டின் கூட்டணி ஒப்புக்கொள்ள வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு அமெரிக்காவின் மூன்றாவது விமானம் தாங்கி போர்க்கப்பல் வருகை தந்துள்ள நிலையில், எதிரிகளின் நடமாட்டங்களை ஈரானின் ஆயுதப் படைகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் அமீர் ஹதாமி தெரிவித்துள்ளார்.
- குருநானக் தேவின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்கவும் குருத்வாராக்களில் வழிபடவும் 1822 இந்திய சீக்கியர்கள் நாளை பாகிஸ்தான் செல்கின்றனர்.
- அரிசி இருப்புக் கட்டுப்பாட்டு அரசாணையில் மொத்த வியாபாரிகள் 2,000 டன் வரை அரிசி இருப்பு வைக்க அனுமதி – உணவுத் துறை அமைச்சருக்கு வணிகர் சங்கம் மனு!
- சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தலைமை இயக்குநர் ரபேல் க்ரோஸியை ஈரானுக்குள் அனுமதிப்பது நாட்டின் பாதுகாப்புக்கும் தேசிய நலன்களுக்கும் எதிரானது என ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் அலிரெஸா சலிமி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். ரபேல் க்ரோஸி விரும்பத்தகாத நபர் என்பதும், அவர் உளவாளி என்பதும் தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது எனக் குற்றஞ்சாட்டிய சலிமி, அவரை நாட்டுக்குள் அனுமதிப்பது பாதுகாப்பு ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாதது என வலியுறுத்தியுள்ளார்.
- உலக வல்லரசுகளுடன் இறுதிக்கட்ட மோதலுக்குத் தயாராகுங்கள் – IRGC தளபதி
- கோவையின் புகழ்பெற்ற கங்கா மருத்துவமனையை நிறுவி மருத்துவச் சாதனையின் வாயிலாக எண்ணற்ற மக்களின் வாழ்வில் நம்பிக்கையையும் நலனையும் விதைத்த களகவள்ளி சண்முகநாதன் இன்று மாலை காலமானார்.
- இஸ்ரேலின் ஹைஃபா நகரில் உள்ள ரம்பாம் கண் மருத்துவ நிறுவனம் (Rambam Eye Institute) மருத்துவர்கள், 2025 அக்டோபர் மாத இறுதியில் உலகின் முதல் 3D பயோபிரிண்டிங் முறையில் உருவாக்கப்பட்ட உயிருள்ள மனிதக் கருவிழி மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துள்ளனர்..
- இந்தியாவில் 32 போலிப் பல்கலைக்கழகங்கள்! டெல்லியில் 12, உத்தரப்பிரதேசத்தில் 4, ஆந்திராவில் 3, புதுச்சேரியில் 2 என நாடு முழுவதும் 32 போலிப் பல்கலைக்கழகங்கள் உள்ளதாகப் பல்கலைக்கழக மானியக் குழு பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில் 18 பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகின்றன.



