இந்தியா
பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 23.11.2026

- தங்கம் விலை 12 நாட்கள் கழித்து இன்று சவரனுக்கு ரூ.1080 அதிகரித்து ரூ.92800க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.135 உயர்ந்து ஒரு கிராம் 22 காரட் ஆபரணத்தங்கம் ரூ.11600 ஆக உள்ளது.
- தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது உண்மையாக இருந்தால் அது துரதிஷ்டவசமானது : சென்னை ஐகோர்ட் தலைமைச் செயலாளரும் மாவட்ட ஆட்சியரும் அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
- நீதிமன்ற நேரத்தில் மாவட்ட நிதிபதிகள் கட்டாயம் இருக்கையில் இருக்க வேண்டும் என உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றிக்கை அணைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் அனுப்பினார்.
- ஈரானுக்கு எதிராக விரைவில் இராணுவத் தாக்குதல் நடத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழுத்தம் கொடுத்து வருவதாக இஸ்ரேலின் பொதுச் சேவை ஒளிபரப்பு நிறுவனமான கான் (KAN) செய்தி வெளியிட்டுள்ளது.
- இந்தியாவின் அயோத்திதாம் – நேபாளத்தின் ஜனக்புர் இடையே புதிய ரயில் சேவை இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நேபாள பிரதமர் பாலேந்திர ஷா இருவரும் இணைந்து தொடங்கி வைக்கின்றனர்.
- ரயிலில் பயணம் செய்யும்போது RAC டிக்கெட் கிடைத்தால், இரண்டு பேர் ஒரே படுக்கையைப் பகிர்ந்து பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் இருவருமே முழுக் கட்டணத்தையும் செலுத்துகிறார்கள். 1983-84 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த 43 ஆண்டுகால RAC முறையை ரத்து செய்வது குறித்து இந்திய ரயில்வே பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
- கடந்த சில வாரங்களாக உயர்ந்து வந்த இந்திய பங்கு சந்தை இன்று கடும் சரிவை சந்தித்துள்ளது. சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேலும் நிஃப்டி 300 புள்ளிகளுக்கு மேலும் குறைந்து வர்த்தகமாகி வருகிறது.
