Connect with us

உலகம்

மோடி அமைச்சரவையில் உள்நோக்கத்துடன் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

Published

on

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதையடுத்து பிரதமராக மோடி நேற்று இரண்டாவது முறையாக பதவியேற்றார். அவருடன் சேர்ந்து மேலும் 57 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

25 கேபினட் அமைச்சர்கள், 24 இணை அமைச்சர்கள், 9 தனிப்பொறுப்புடன் கூடிய சிறப்பு அமைச்சர்கள் என மொத்தம் 58 பேர் நேற்று பதவியேற்றனர். ஆனால் இதில் தமிழகத்தில் கூட்டணி கட்சியான அதிமுகவை சேர்ந்த யாரும் அமைச்சராக பதவியேற்கவில்லை. இதனால் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போனது. இந்நிலையில் ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் தான் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அமைச்சரவையில் பாஜகவோடு கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட அதிமுக சார்பாக எவரும் அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை. மக்களவையில் ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றிருந்தாலும் ஏற்கெனவே மாநிலங்களவையில் 13 உறுப்பினர்களை அதிமுக பெற்றிருக்கிறது. இவர்களது ஆதரவு என்பது மத்திய பாஜக அரசுக்கு மிகமிக அவசியமாகும். ஆனாலும், அதிமுகவிலிருந்து எவரையும் மத்திய அமைச்சரவையில் சேர்க்காமல் புறக்கணித்திருப்பதற்கான காரணங்கள் என்ன என்பது தெரியவில்லை.

இதன்மூலம் அதிமுகவை மட்டுமல்ல, தமிழகத்தையும் புறக்கணித்திருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது. மோடிக்கு எதிராக தமிழகத்தில் எதிர்ப்பு அலை வீசிய காரணத்தால் இத்தகைய புறக்கணிப்பு நடைபெற்றிருப்பதாகவே எண்ண தோன்றுகிறது. அதிமுகவை புறக்கணித்திருந்தாலும், பாஜகவை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரில் ஒருவரை மாநிலங்களவை உறுப்பினராக்கி மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கியிருக்கலாம்.

கேரளாவிற்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்பதற்காக வி.முரளிதரனுக்கு மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு அமைச்சராக வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதைப்போல தமிழகத்திற்கும் வாய்ப்பு வழங்கியிருக்கலாம்.

மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்றிருக்கிற நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோரை தமிழர்கள் என்று கூறினாலும், தமிழக மக்களோடு தொடர்பில்லாத இவர்களை தமிழகத்தின் பிரதிநிதிகளாக கருத முடியாது. எனவே, ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முழு பொறுப்பு பிரதமர் நரேந்திர மோடி தான் என தெரிவித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 மணி நேரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.07.2026

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 5 புதன் பெயர்ச்சி: மிதுனம், கடகம் உள்பட இந்த 4 ராசிகளுக்கு பதவி உயர்வு, பணவரவு, தொழிலில் முன்னேற்றம்!

வணிகம்22 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் முக்கிய மாற்றங்கள்: LPG விலை, தட்கல் டிக்கெட், கிரெடிட் கார்டு, ITR… தெரிந்துகொள்ள வேண்டிய 6 அப்டேட்கள்!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 1 சுக்கிரன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்கள் உஷார்… பணம், வேலை, உறவுகளில் சவால்கள் அதிகரிக்கலாம்!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 2 செவ்வாய் பெயர்ச்சி: மேஷம், மிதுனம் உள்பட இந்த 5 ராசிகளுக்கு தொழில், பணவரவில் ஜாக்பாட்!

வணிகம்22 மணி நேரங்கள் ago

அஞ்சலக POMIS திட்டம்: ₹15 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ₹9,250 வருமானம்… பாதுகாப்பான அரசு சேமிப்புத் திட்டம்!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

சுக்கிரன் உத்திர நட்சத்திர பெயர்ச்சி: இந்த 5 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, குடும்ப மகிழ்ச்சி… அதிர்ஷ்டம் குவியும்!

வணிகம்22 மணி நேரங்கள் ago

EPFO முக்கிய எச்சரிக்கை: UAN-ல் இந்த விவரத்தில் தவறு இருந்தால் PF, ஓய்வூதிய பலன்கள் பாதிப்பு… உடனே சரிபார்க்குங்கள்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் என்ன பலன்? பணம், வேலை, குடும்பம் எப்படி இருக்கும்?ஆகஸ்ட் மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் என்ன பலன்? பணம், வேலை, குடும்பம் எப்படி இருக்கும்?

வணிகம்23 மணி நேரங்கள் ago

தங்கம் வாங்க நல்ல நேரமா? அடுத்த சில மாதங்களில் தங்கம் விலை குறையலாம்… சர்வதேச சந்தை நிபுணர்கள் கணிப்பு!

இந்தியா5 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

ஆரோக்கியம்5 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

ஆரோக்கியம்4 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

இந்தியா4 நாட்கள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

சினிமா5 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

இந்தியா4 நாட்கள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்5 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

Uncategorized3 நாட்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்3 நாட்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

Translate »
Top pocket traffic blog. Andarine (s4) and mk 677 value pack. У iphone 17 pro можуть змінити розташування логотипа apple на задній панелі.