Connect with us

ஆரோக்கியம்

மொஹல் சிக்கன் பிரியாணி ரெசிபி: மொகலாய ஸ்டைலில் ருசிகர சிக்கன் பிரியாணி செய்யும் எளிய முறை!

Published

on

மொகல் சிக்கன் பிரியாணி ரெசிபி: மொகலாயரின் பாரம்பரிய ருசி உங்கள் வீட்டில்!

பிரியாணி என்றாலே mouth watering! குறிப்பாக மொகலாய ஸ்டைலில் செய்யப்படும் சிக்கன் பிரியாணி என்றால் அதை விட்டுவிட முடியுமா? அப்படி ஒரு தனி சுவையை தரும் இந்த மொஹல் சிக்கன் பிரியாணியை இந்த வாரம் நீங்கள் சமைத்துப் பாருங்க.

தேவையான பொருட்கள்:

  • பெரிய வெங்காயம் – 4 (நீள நறுக்கியது)

  • தக்காளி – 4 (நறுக்கியது)

  • சிக்கன் – 1 கிலோ

  • இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன்

  • தயிர் – 1 கப்

  • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

  • மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

  • பச்சை மிளகாய் – 6

  • பிரியாணி இலை, அன்னாசி பூ – தலா 2

  • ஏலக்காய் – 6, கிராம்பு – 3, ஷாஜீரா – 2 டீஸ்பூன்

  • தனியாதூள், சோம்புத்தூள், சீரகத்தூள் – தலா 1 டீஸ்பூன்

  • கரம் மசாலா – 2 டீஸ்பூன்

  • கொத்தமல்லி, புதினா – தலா 2 கைப்பிடி

  • முந்திரி, திராட்சை – தேவையான அளவு

  • பாஸ்மதி அரிசி – 1 கிலோ

  • எலுமிச்சை – 1, குங்குமப்பூ – சிறிது

  • உப்பு, எண்ணெய், நெய் – தேவையான அளவு

செய்முறை:

  1. சிக்கனில் தயிர், இஞ்சி பூண்டு விழுது, மசாலா தூள், கறி இலை, புதினா, கொத்தமல்லி, உப்பு உள்ளிட்டவை சேர்த்து அரை மணி நேரம் ஊற விடவும்.

  2. பாஸ்மதி அரிசியை கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும்.

  3. வாணலியில் எண்ணெய், நெய் சேர்த்து வெங்காயத்தை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே எண்ணெயில் முந்திரி, திராட்சை வறுக்கவும்.

  4. கடுத்த பாத்திரத்தில் எண்ணெய், நெய், மசாலா பொருட்கள் தாளித்து வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது வதக்கவும். பின் தயிர், தக்காளி, புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.

  5. ஊற வைத்த சிக்கனை சேர்த்து நன்கு வேகவிடவும்.

  6. மற்றொரு பாத்திரத்தில் நீர், மசாலா பொருட்கள், உப்பு சேர்த்து அரிசியை பாதி பதம் வரை வேகவைத்து வடிக்கவும்.

  7. சிக்கன் அரை வேகத்தில் சமைந்ததும் மேலே அரிசி, எலுமிச்சை சாறு, வறுத்த வெங்காயம், முந்திரி, திராட்சை சேர்த்து மூடி தம் போடவும்.

  8. இறுதியாக நெய் சேர்த்து மெதுவாக கிளறினால் மொஹல் சிக்கன் பிரியாணி தயார்!

Translate »
Sell products collect.