ஆரோக்கியம்
பப்பாளி விதையின் மருத்துவ நன்மைகள்: கொலஸ்ட்ரால், உடல் எடை, மாதவிடாய் பிரச்சனை வரை தீர்வு!

பப்பாளி பழம் போலவே அதன் விதைகளும் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டவை. இதில் நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள், பாலிபினால்கள், ஃபிளாவனாய்டுகள் என பல உடல் நலத்திற்கு உதவும் சேர்மங்கள் உள்ளன.
பப்பாளி விதைப் பொடியை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்தால் பல நன்மைகள் கிடைக்கும்:
✅ கெட்ட கொலஸ்ட்ரால் குறைவு:
பப்பாளி விதையில் உள்ள ஒலியிக் அமிலம், மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் கெட்ட கொலஸ்ட்ராலை எரித்து இதயத்தை பாதுகாக்கும்.✅ உடல் எடை குறைப்பு:
பப்பாளி விதை நார்ச்சத்து அதிகம் உள்ளதால், கொழுப்பை எரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. பசியையும் கட்டுப்படுத்தும்.✅ மலச்சிக்கல் தீர்வு:
பப்பாளி விதையின் மலமிளக்கி தன்மை செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலை சரிசெய்கிறது.✅ இரத்த சர்க்கரை கட்டுப்பாடு:
இதில் உள்ள நார்ச்சத்து, சுகர் லெவலை கட்டுப்படுத்தி, இன்சுலின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.✅ குடல் ஆரோக்கியம்:
கார்பீன் என்ற தனிமம் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.✅ மூட்டு வலி நிவாரணம்:
வைட்டமின் சி, ஆல்கலாய்டுகள், பாலிபினால்கள், ஃபிளாவனாய்டுகள் ஆகியவை அழற்சி குறைத்து மூட்டுவலிக்கு நிவாரணம் தரும்.✅ மாதவிடாய் சீராக்கும்:
பப்பாளி விதையில் உள்ள கரோட்டின், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சீராக உற்பத்தியாக உதவுவதால், மாதவிடாய் பிரச்சனைகள், வலி குறையும்.



















