வணிகம்
ஏப்ரல் 1, 2025 முதல் மாறும் முக்கிய விதிகள் – உங்களுக்கு எந்த மாற்றம் பாதிக்கும்?

ஏப்ரல் 1, 2025 முதல் முக்கிய விதி மாற்றங்கள் – முழு விவரம்!
2025-26 புதிய நிதியாண்டு ஏப்ரல் 1 முதல் தொடங்கவுள்ளது. இதற்கேற்ப, மத்திய அரசு மற்றும் வங்கிகள் சில முக்கிய விதிகளில் மாற்றங்களை கொண்டு வருகிறது. இந்த மாற்றங்கள் உங்கள் LPG சிலிண்டர் விலை, வருமான வரி, EPFO விதிகள், FD வட்டி விகிதங்கள், UPI செயல்பாடு, கிரெடிட் கார்டு சலுகைகள் போன்றவற்றை பாதிக்கும்.
இதனால் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், வங்கிப் பரிவர்த்தனை செய்யும் நபர்கள், தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் போன்ற பலருக்கும் தாக்கம் ஏற்படும். முக்கியமான இந்த விதி மாற்றங்கள் என்னென்ன என்பதை முழுமையாக பார்ப்போம்!
LPG சிலிண்டர் விலை மாற்றம்
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எல்பிஜி சிலிண்டர் விலை மாற்றப்படும். ஏப்ரல் 1, 2025 அன்று வீட்டு மற்றும் வணிக சிலிண்டர் விலையில் கூட்டம் அல்லது குறைப்பு ஏற்படலாம். இது சாதாரண மக்களின் குடும்ப செலவுகளை நேரடியாக பாதிக்கக்கூடும்.
அகவிலைப்படி உயர்வு (DA Hike)
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2% DA உயர்வு அமலாகும்.
இது ஏப்ரல் 1 முதல் மேலும் அதிகரித்த ஊதியமாக வழங்கப்படும்.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) அமல்
மத்திய அரசு ஊழியர்களுக்கு National Pension System (NPS) மாற்றம் அமலுக்கு வருகிறது.
விருப்பமுள்ள ஊழியர்கள் இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணையலாம்.
வங்கித் துறையில் புதிய மாற்றங்கள்
நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் 60% கடனை முன்னுரிமைத் துறைகளுக்கு ஒதுக்க வேண்டும்.
பெண்களுக்கு கடன் பெறுதல் எளிதாகும்.
வீடு வாங்கும் கடன் எல்லை:
பெரிய நகரங்களில் – ரூ.50 லட்சம்
நடுத்தர நகரங்களில் – ரூ.45 லட்சம்
சிறிய நகரங்களில் – ரூ.35 லட்சம்
FD வட்டி விகித மாற்றம்
SBI, HDFC, இந்தியன் வங்கி, IDBI வங்கி உள்ளிட்ட பல வங்கிகள் FD வட்டி விகிதங்களை மாற்ற உள்ளன. சில சிறப்பு FD திட்டங்கள் அதிக வருமானத்தைக் தரும்.
கிரெடிட் கார்டு சலுகை மாற்றம்
SBI SimplyCLICK Swiggy 5X புள்ளிகள் குறையும்.
Air India Signature 30 புள்ளியில் இருந்து 10 புள்ளிகளாக குறையும்.
IDFC First Bank Club Vistara மைல்ஸ்டோன் சலுகைகள் ரத்து செய்யப்படும்.
UPI மற்றும் மொபைல் எண் புதுப்பிப்பு அவசியம்
வங்கி சேவைகளை தொடர, உங்கள் மொபைல் எண்ணை UPI இல் புதுப்பிக்காதால் சேவை தடை செய்யப்படும்.
பழைய எண்ணை வேறொருவருக்கு ஒதுக்கப்பட்டால் UPI சேவை வேலை செய்யாது.
ATM பரிவர்த்தனை கட்டண உயர்வு (May 1, 2025 முதல்)
இலவச வரம்பு மீறியபின்,
பணம் எடுப்பதற்கு ரூ.19 கட்டணம்
இருப்பு விசாரணை, மினி ஸ்டேட்மென்ட் போன்ற சேவைக்கு ரூ.7 கட்டணம்
EPFO விதி மாற்றம்
EPFO 3.0 விதிகள் புதுப்பிக்கப்படுகின்றன.
ஓய்வூதிய நிதியில் பல முன்னேற்றங்களும் மாற்றங்களும் வரும்.
வருமான வரி விதிகள் மாற்றம்
1961 வருமான வரிச் சட்டத்தில் முக்கிய திருத்தங்கள்.
புதிய வரி விலக்கு மற்றும் TDS விதிகள் ஏப்ரல் 1 முதல் அமல்.
இந்த விதி மாற்றங்கள் உங்கள் வரவு-செலவு திட்டங்களை உறுதியாக பாதிக்கக்கூடும். எனவே, நிதி மேலாண்மையில் மாற்றங்களை முன்கூட்டியே செய்யுங்கள்.

















