சினிமா செய்திகள்
நடிகை திரிஷாவின் X கணக்கு ஹேக் – அதிகாரப்பூர்வ விளக்கம்!

பிரபல நடிகை திரிஷா, தனது X பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
“என்னுடைய X கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. தயவுசெய்து அதில் பகிரப்படும் எந்த தகவலையும் நம்ப வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.
அத்துடன், சமூக வலைதளங்களில் இருக்கும் போலி கணக்குகளுக்கு ரசிகர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், விரைவில் தனது கணக்கை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சமீப நாட்களாக பிரபலங்களின் சமூக வலைதளங்கள் ஹேக் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, சரிபாராத தகவல்களை நம்பாமல் இருப்பதும், ஆபத்தான இணைப்புகளில் கிளிக் செய்யாமல் இருப்பதும் முக்கியம்.







