சினிமா
சீரடியில் பிறந்தநாளை கொண்டாடிய த்ரிஷா; லியோ படக்குழு கொடுத்த சூப்பர் பரிசு!

பொன்னியின் செல்வன் 2 படத்தில் குந்தவையாக நடித்து அந்த அகநக பாடல் காட்சியில் காதல் ரசத்தை பிழிந்த நடிகை த்ரிஷா தனது 40வது பிறந்தநாளை இன்று சீரடி சாய் பாபா கோயிலுக்குச் சென்று கொண்டாடினார்.
அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சற்று முன் ஷேர் செய்த நடிகை த்ரிஷா ரசிகர்களுக்கும் தனக்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

#image_title
நடிகை த்ரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா இடம்பெற்ற லியோ படத்தில் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்லை வெளியிட்டு ரசிகர்களுக்கு சூப்பரான பர்த்டே ட்ரீட்டை கொடுத்துள்ளது.
மேலும், நடிகை த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் தி ரோடு திரைப்படத்தின் மேக்கிங் டீசர் வீடியோவும் மாலை 6.02 மணிக்கு த்ரிஷாவின் பிறந்தநாள் பரிசாக வெளியாகி ரசிகர்களை மிரட்டி வருகிறது.

#image_title
இயக்குநர் அருண் வசீகரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் த்ரிஷாவுடன் இணைந்து சார்பட்டா பரம்பரையில் டான்ஸிங் ரோஸ் ஆக நடித்த நடிகர் சபீரும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பொன்னியின் செல்வன் 2, லியோ, தி ரோடு என அடுத்தடுத்து மெர்சல் காட்டி வரும் நடிகை த்ரிஷா கேக் வெட்டி தனது 40வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய போட்டோவையும் ஷேர் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.