வணிகம்
8வது ஊதியக்குழு: ஃபிட்மெண்ட் ஃபாக்டரால் உங்கள் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கலாம்? முழு கணக்கீடு இதோ!

8வது ஊதியக்குழு மூலம் சம்பள உயர்வு எப்படி இருக்கும்? ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அடிப்படையில் முழுமையான கணக்கீடு இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்காக 8வது ஊதியக் குழுவை அமைக்கும் பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்தக் குழு நியமிக்கப்பட்ட பிறகு பல்வேறு தரப்புகளுடன் ஆலோசனை நடத்தி, அரசுக்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்கவுள்ளது. லட்சக்கணக்கான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இந்த மாற்றத்துக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த புதிய ஊதியக்குழுவின் பரிந்துரைகளில் முக்கியமான பங்கு வகிக்கும் அம்சம் “ஃபிட்மென்ட் ஃபாக்டர்” ஆகும். இது புதிய ஊதியத்தை கணக்கிடும் ஒரு முக்கியமான அடிப்படை. 7வது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆக இருந்தது. இதேபோல், 8வது ஊதியக்குழுவில் இது 2.86 அல்லது கூடுதலாக 3.68 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபிட்மென்ட் ஃபாக்டர் கணக்கீடு:
புதிய அடிப்படை ஊதியம் = பழைய அடிப்படை ஊதியம் × ஃபிட்மென்ட் ஃபாக்டர்
உதாரணமாக, 6வது ஊதியக்குழுவின் கீழ் ஒரு ஊழியரின் அடிப்படை ஊதியம் ரூ.20,000 என்றால்:
7வது ஊதியத்தில் (2.57 ×): ரூ.51,400
8வது ஊதியத்தில் (2.86 ×): ரூ.57,200
8வது (3.68 ×): ரூ.73,600
இது போலவே மற்ற உயர்வுகளும் கணக்கிடப்படுகின்றன.
ஊதிய உயர்வின் ஒப்பீட்டு அட்டவணை:
| பழைய அடிப்படை ஊதியம் | 7வது CPC (2.57) | 8வது CPC (2.86) | 8வது CPC (3.68) |
|---|---|---|---|
| ரூ.10,000 | ரூ.25,700 | ரூ.28,600 | ரூ.36,800 |
| ரூ.15,000 | ரூ.38,550 | ரூ.42,900 | ரூ.55,200 |
| ரூ.20,000 | ரூ.51,400 | ரூ.57,200 | ரூ.73,600 |
| ரூ.25,000 | ரூ.64,250 | ரூ.71,500 | ரூ.92,000 |
| ரூ.30,000 | ரூ.77,100 | ரூ.85,800 | ரூ.1,10,400 |
| ரூ.35,000 | ரூ.89,950 | ரூ.1,00,100 | ரூ.1,28,800 |
| ரூ.40,000 | ரூ.1,02,800 | ரூ.1,14,400 | ரூ.1,47,200 |
எதிர்பார்ப்பு என்ன?
8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் போது, மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் ஒரு பெரிய நிவாரணமாக அமையும். குறிப்பாக, ஃபிட்மென்ட் ஃபாக்டர் உயர்வால் சம்பளத்தில் நேரடி உயர்வு பெற முடியும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



