Connect with us

வணிகம்

8வது ஊதியக்குழு வருகிறதே: ஊழியர்கள் குஷி! 186% ஓய்வூதிய உயர்வு, காரணம் Fitment Factor!

Published

on

8வது ஊதியக்குழு வருகிறதே… மத்திய ஊழியர்களுக்கு சம்பள, ஓய்வூதியத்தில் 186% வரையில் அதிகரிப்பு!

மத்திய அரசு 8வது ஊதியக்குழுவை அமல்படுத்த தயாராகியுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள 7வது ஊதியக்குழு 2025 டிசம்பரில் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய 8வது சம்பள ஆணையம் ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் வகையில் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.

ஃபிட்மெண்ட் ஃபாக்டர் எனப்படும் சம்பளக் கணக்கீட்டில் முக்கியமான காரணி தற்போது 2.57-ஆக உள்ளதோடு, புதிய குழுவின் பரிந்துரையில் இது 2.86-ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல், ஓய்வூதியதாரர்களுக்கும் பெரும் நிவாரணம் காத்திருக்கிறது.

 186% ஓய்வூதிய உயர்வு!

இந்த மாற்றத்தால், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000-இல் இருந்து ரூ.25,740 வரை உயரக்கூடும். இது 186 சதவீத உயர்வாகும், எனவே பணவீக்கத்தில் தவிக்கும் ஓய்வூதியதாரர்களுக்கு இது ஒரு நிதி ஜாக்பாட்.

 42 புதிய பதவிகள் உருவாக்கம்:

ஏப்ரல் 21 அன்று மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், 42 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது 8வது ஊதியக்குழுவை அமைப்பதற்கான முன்னேற்பாடாகவே பார்க்கப்படுகிறது. முன்னர் 7வது குழுவிற்கு 45 நியமனங்கள் செய்யப்பட்டதை பார்த்தால், இது ஒரு வழக்கமான நிர்வாக நடைமுறையாகும்.

 அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்:

8வது ஊதியக்குழுவின் தலைவரும் உறுப்பினர்களும் விரைவில் நியமிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வர்த்தமானியில் வெளியாகும்.

Translate »
Van canvas tassen cotton tote factory..